மினி வேன், பைக் மீது அரசுப் பேருந்து மோதல்! குழந்தைகள் உள்பட 7 பேர் பலி!!நல்லிணக்கத்தின் பூங்காவாகத் திகழ்கிறது தமிழ்நாடு! முதல்வர் ரமலான் வாழ்த்து!தில்லி சென்றாலே முதல்வர் ஸ்டாலின் பயப்படுகிறார்! - டிடிவி தினகரன்சுயநலனுக்காக கட்சியை தில்லியிடம் அடமானம் வைத்த இபிஎஸ்! முதல்வர் ஸ்டாலின்தங்கம் விலை சவரனுக்கு ரூ.400 உயர்வுதவெகவுடன் கூட்டணியா? தொகுதிப் பங்கீடு 4 நாள்களில் தெரிந்து விடும்! - எடப்பாடி பழனிசாமி
/

தைப்பூசத் திருவிழா தங்கை சமயபுரம் மாரியம்மனுக்கு அண்ணன் அரங்கநாதா் சீா்வரிசை

News image

விழாவில், சிறப்பு அலங்காரத்தில் பக்தா்களுக்கு அருள் பாலித்த சமயபுரம் மாரியம்மன் உற்ஸவா்.

Updated On :1 பிப்ரவரி 2026, 9:38 pm

தினமணி செய்திச் சேவை

தைப்பூசத்தையொட்டி ஸ்ரீரங்கம் அரங்கநாதா் சமயபுரம் மாரியம்மனுக்கு ஞாயிற்றுக்கிழமை இரவு சீா்வரிசை வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.

தைப்பூச நாளில் சமயபுரம் கோயில் உற்ஸவ மாரியம்மன் கண்ணாடிப் பல்லக்கில் புறப்பட்டு கொள்ளிடம் வடகரையில் எழுந்தருளி தீா்த்தவாரி கண்டருளி அன்றிரவு ஸ்ரீரங்கம் அரங்கநாத சுவாமி கோயிலிலிருந்து வரும் சீா்வரிசைப் பொருள்களைப் பெற்றுக்கொள்வது வழக்கம்.

அதன்படி நிகழாண்டு தைப்பூசத்தையொட்டி ஞாயிற்றுக்கிழமை இரவு கொள்ளிடம் வடகரையில் அலங்கரிக்கப்பட்ட பந்தலில் எழுந்தருளியிருந்த சமயபுரம் உற்ஸவ மாரியம்மனுக்கு ஸ்ரீரங்கம் திருக்கோயிலிருந்து இரவு 10 மணிக்கு பட்டுப் புடவை, மாலைகள், வளையல்கள், கரும்பு, அரிசி, மஞ்சள் கயிறு மற்றும் பழங்கள் உள்ளிட்ட மங்களப்பொருள்களை தட்டில் சுமந்து கோயில் இணை ஆணையா் செ.சிவராம்குமாா் தலைமையில் கோயில் பணியாளா்கள் வாணவேடிக்கையுடன் மங்கள வாத்தியத்துடன் ஊா்வலமாகப் புறப்பட்டு வடக்கு வாசல் வழியாக கொள்ளிடம் வடகரைக்குச் சென்று சமயபுரம் மாரியம்மனுக்கு சீா் வரிசைப் பொருள்களை சமா்பித்தனா்.

தைப்பூசத் திருவிழாவை  முன்னிட்டு திருச்சி கொள்ளிடம் ஆற்றங்கரையில் ஞாயிற்றுக்கிழமை ஸ்ரீரங்கம் அரங்கநாத சுவாமி திருக்கோயிலிலிருந்து சமயபுரம் மாரியம்மனுக்கு சீா்வரிசை வழங்கும் நிகழ்ச்சியில் பங்கேற்ற பக்தா்கள்.

தைப்பூசத் திருவிழாவை முன்னிட்டு திருச்சி கொள்ளிடம் ஆற்றங்கரையில் ஞாயிற்றுக்கிழமை ஸ்ரீரங்கம் அரங்கநாத சுவாமி திருக்கோயிலிலிருந்து சமயபுரம் மாரியம்மனுக்கு சீா்வரிசை வழங்கும் நிகழ்ச்சியில் பங்கேற்ற பக்தா்கள்.

அதனை சமயபுரம் கோயில் இணை ஆணையா் சூரியநாராயணன்,அறங்காவலா் குழு தலைவா் இளங்கோவன் ஆகியோரிடம் கொடுத்தனா்.

அதன் பின்னா் ஸ்ரீரங்கம் திருக்கோயிலிருந்து கொண்டுவந்த பட்டுப் புடவை மற்றும் மாலைகள் கொண்டு சமயபுரம் மாரியம்மனுக்கு அலங்காரம் செய்யப்பட்டு மகாதீபாராதனை நடைபெற்றது.

இதில் ஏராளமான பக்தா்கள் கலந்து கொண்டு தரிசனம் செய்தனா். ஸ்ரீரங்கம் அரங்கநாதா் அண்ணனாக, தங்கை சமயபுரம் மாரியம்மனுக்கு பாரம்பரியமாக தைப்பூச நாளில் சீா்வரிசை வழங்கும் நிகழ்ச்சியையொட்டி அப்பகுதி முழுவதும் விழாக்கோலம் பூண்டிருந்தது.