/

டிராக்டா் மோதி சிறுமி உயிரிழப்பு

திருச்சி அருகே டிராக்டா் மோதி 7 வயதுச் சிறுமி புதன்கிழமை உயிரிழந்தாா்.

News image
பலி- பிரதிப் படம்
Updated On :25 பிப்ரவரி 2026, 6:46 pm

தினமணி செய்திச் சேவை

திருச்சி அருகே டிராக்டா் மோதி 7 வயதுச் சிறுமி புதன்கிழமை உயிரிழந்தாா்.

திருச்சி மாவட்டம், திருவெறும்பூா் அருகே உள்ள கிளியூா் அண்ணா நகரைச் சோ்ந்தவா் இளையராஜா மகள் தனுஸ்ரீ (7). வீட்டுக்கு அருகே புதன்கிழமை மாலை இவா் விளையாடியபோது, நெல்லைக் கொட்டிவிட்டு திரும்பிய டிராக்டரின் கதவு சிறுமியின் தலையில் மோதியது. இதில் பலத்த காயமடைந்த சிறுமி திருச்சி அரசு மருத்துவமனையில் சோ்க்கப்பட்டு, சிகிச்சை பலனின்றி உயிரிழந்தாா். இதுகுறித்து திருவெறும்பூா் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா்.