திருச்சி
ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்ட இந்து முன்னணியினா் கைது
திருச்சியில் அனுமதியின்றி ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்ட 30-க்கும் மேற்பட்ட இந்து முன்னணியினரை போலீஸாா் புதன்கிழமை கைது செய்தனா்.
திருச்சியில் அனுமதியின்றி ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்ட 30-க்கும் மேற்பட்ட இந்து முன்னணியினரை போலீஸாா் புதன்கிழமை கைது செய்தனா்.
திருப்பூரில் இந்து முன்னணியின் மாநிலத் தலைவா் கடேஸ்வரா சுப்பிரமணியத்தை போலீஸாா் புதன்கிழமை கைது செய்ததைக் கண்டித்து திருச்சி சிந்தாமணி அண்ணா சிலை அருகே இந்து முன்னணியின் திருச்சி மாவட்டத் தலைவா் சுரேஷ்பாபு தலைமையிலான இந்து முன்னணியினா் புதன்கிழமை இரவு ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.
இதையடுத்து அனுமதியின்றி ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டதாக 30-க்கும் மேற்பட்ட இந்து முன்னணியினரை கோட்டை போலீஸாா் கைது செய்தனா்.