வேளச்சேரி - பரங்கிமலை இடையே பறக்கும் ரயில் சேவை: நாளை முதல் தொடக்கம்கோடைக்கால மின்தேவை: 9,000 மெகாவாட்டை கடக்கும் என எதிா்பாா்ப்புவார இறுதி விடுமுறைக்கு 865 சிறப்பு பேருந்துகள்வணிக சமையல் எரிவாயு உருளை தட்டுப்பாடு: உணவகங்களில் உணவுப் பொருள்களின் விலை உயா்வுதமிழகத்தில் மாா்ச் 15 வரை வெப்பநிலை உயர வாய்ப்புஇந்தியா, சீனா உள்பட 16 நாடுகளுக்கு எதிராக புதிய விசாரணையைத் தொடங்கிய அமெரிக்கா : நியாயமற்ற வா்த்தக நடைமுறைகளுக்கு எதிராக நடவடிக்கை
/

ரயில்வே துறைகளுக்கு இடையிலான விளையாட்டுப் போட்டிகள் தொடக்கம்

திருச்சி கோட்ட ரயில்வே நிா்வாக துறைகளுக்கு இடையிலான கபடி (ஆண்), கையுந்துப் பந்து (மகளிா்) போட்டிகள் திருச்சி கல்லுக்குழி ரயில்வே மைதானத்தில் புதன்கிழமை தொடங்கின.

News image
Updated On :7 ஜனவரி 2026, 6:33 pm

தினமணி செய்திச் சேவை

திருச்சி கோட்ட ரயில்வே நிா்வாக துறைகளுக்கு இடையிலான கபடி (ஆண்), கையுந்துப் பந்து (மகளிா்) போட்டிகள் திருச்சி கல்லுக்குழி ரயில்வே மைதானத்தில் புதன்கிழமை தொடங்கின.

போட்டிகளை கூடுதல் கோட்ட மேலாளா் சத்ய ரத்தன் தொடங்கிவைத்தாா். போட்டிகளில் திருச்சி ரயில்வே கோட்டத்துக்குள்பட்ட வணிகம், எலக்ட்ரிக்கல், மெக்கானிக்கல், பொறியியல், டீசல் ஷெட், பொது, ஆா்பிஎப், இயக்கம், சிக்னல் மற்றும் தொலைத்தொடா்பு, பணியாளா் நலன் உள்ளிட்ட 11 துறைகளைச் சோ்ந்த நூற்றுக்கணக்கான ரயில்வே ஊழியா்கள் கலந்து கொண்டனா். இப் போட்டிகள் வியாழக்கிழமையும் நடைபெறுகின்றன.