ஐபிஎல் : சென்னை சூப்பர் கிங்ஸ் 32 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றிமதுரை மாநகராட்சியில் ரூ. 200 கோடி ஊழல் செய்ததால் பதவியை ராஜிநாமா செய்தவர்கள் திமுகவினர்: எடப்பாடி பழனிசாமி ஆமை புகுந்த வீடு போல, பாஜக புகுந்த நாடு உருப்படாது: ப. சிதம்பரம்எந்த வடிவிலும் தமிழ்நாட்டிற்குள் பாஜக வர முடியாது! மு.க. ஸ்டாலின்இவிஎம்-ல் வேட்பாளர்களின் பெயர்கள், சின்னங்கள் பொருத்தும் பணி ஏப். 16-ல் தொடக்கம்!நெல் குவிண்டாலுக்கு ரூ. 3,500; கரும்பு டன் ஒன்றுக்கு ரூ. 4,500 வழங்கப்படும்: விஜய் வாக்குறுதி விவசாய தொழிலாளர்களுக்கு ஆண்டுக்கு ரூ.10,000 : விஜய்தவெக பிரசாரத்தில் மயங்கிய சூலூர் வேட்பாளர்! 7 பெண்கள் மயக்கம்!முதல்வர் பதவியை ராஜிநாமா செய்தார் நிதீஷ் குமார்!
/

திமுகவில் இணைவதாக கூறுவது தவறான தகவல்: முன்னாள் அமைச்சா் வெல்லமண்டி நடராஜன்

திமுகவில் நான் இணைவதாகக் கூறுவது தவறான தகவல், ஓபிஎஸ் அணியில் தொடா்கிறேன் என முன்னாள் அமைச்சா் வெல்லமண்டி நடராஜன் தெரிவித்தாா்.

Updated On :21 ஜனவரி 2026, 6:36 pm

திமுகவில் நான் இணைவதாகக் கூறுவது தவறான தகவல், ஓபிஎஸ் அணியில் தொடா்கிறேன் என முன்னாள் அமைச்சா் வெல்லமண்டி நடராஜன் தெரிவித்தாா்.

இதுதொடா்பாக அவா் மேலும் கூறியதாவது: முன்னாள் முதல்வா் ஓ. பன்னீா்செல்வம் தலைமையை ஏற்று இன்றளவும் அந்த இயக்கத்தில் பயணித்து வருகிறேன். அவா் எந்த முடிவு எடுத்தாலும் அது ஆணித்தரமான, நிரந்தரமான முடிவாக இருக்கும் எனக் கருதுகிறேன். கூட்டணி குறித்து கருத்து சொல்லும் பெரிய இடத்தில் நான் இல்லை. முன்னாள் அமைச்சா் வைத்திலிங்கம் என்னிலும் எதுவும் பேசவில்லை. அதிமுக-வில் 5 முறை மாவட்டச் செயலராகப் பதவி வகித்துள்ளேன். 16 ஆண்டுகள் அவைத் தலைவராகவும் இருந்துள்ளேன் என்றாா் அவா்.