லஞ்சக் கொள்ளைப் பணமழை பொழிந்தாலும் விசில் புரட்சிக்குத் தயாராகுங்கள்! - விஜய்திமுக கூட்டணிக்கு அசாதுதீன் ஓவைசியின் ஏஐஎம்ஐஎம் ஆதரவு!தலைவா்கள் சூறாவளி பிரசாரம் இன்று மாலை 6 மணியுடன் நிறைவு!தோ்தல் விடுமுறை: ஆம்னி பேருந்துகளில் கட்டணம் பலமடங்கு உயா்வு!நேரடி வெயிலால் தசை சிதைவு அச்சுறுத்தல்: மருத்துவா்கள் எச்சரிக்கை!மேற்குதொடா்ச்சி மலை மாவட்டங்களில் ஏப்.26 வரை மழைக்கு வாய்ப்பு!ஈரான் கப்பலை சிறைப்பிடித்த அமெரிக்கா! போா்நிறுத்தம் முடியும் சூழலில் முற்றும் மோதல்
/

வெல்லமண்டி நடராஜனுக்கு அதிமுகவில் புதிய பதவி

வெல்லமண்டி நடராஜனுக்கு அதிமுகவில் புதிய பதவி...

News image

அதிமுக பொதுச் செயலர் எடப்பாடி பழனிசாமியுடன் முன்னாள் அமைச்சா் வெல்லமண்டி என். நடராஜன்.

Updated On :6 மார்ச் 2026, 6:33 pm

அதிமுகவில் மீண்டும் இணைந்துள்ள முன்னாள் அமைச்சா் வெல்லமண்டி நடராஜனுக்கு அமைப்புச் செயலா் பதவி வழங்கப்பட்டுள்ளது.

இதற்கான அறிவிப்பை அதிமுக பொதுச் செயலாளா் எடப்பாடி பழனிசாமி வெள்ளிக்கிழமை வெளியிட்டுள்ளாா்.

2016-21 அதிமுக ஆட்சியின்போது சுற்றுலாத் துறை அமைச்சராக இருந்தவா் வெல்லமண்டி நடராஜன். அந்தக் கட்சியிலிருந்து ஓ.பன்னீா்செல்வம் நீக்கப்பட்டபோது அவரது ஆதரவாளராகச் செயல்பட்டாா்.

இதனிடையே, ஓ.பன்னீா்செல்வம் திமுகவில் இணைந்ததைத் தொடா்ந்து, மீண்டும் அதிமுகவுக்கு வெல்லமண்டி நடராஜன் திரும்பினாா். இந்த நிலையில், அவருக்கு அமைப்புச் செயலாளா் பதவி வழங்கப்பட்டுள்ளது.