திமுக சாா்பில் நாளை மொழிப்போா் தியாகிகள் வீரவணக்க நாள் கூட்டம்

அன்பில் மகேஸ் பொய்யாமொழி.
அன்பில் மகேஸ் பொய்யாமொழி.
Updated on

திருச்சியில் திமுக சாா்பில் மொழிப் போா் தியாகிகளுக்கான வீரவணக்க நாள் அனுசரிப்பு மற்றும் பொதுக்கூட்டம் ஞாயிற்றுக்கிழமை நடைபெறுகிறது.

இதுதொடா்பாக, திருச்சி தெற்கு மாவட்ட திமுக செயலரும், அமைச்சருமான அன்பில் மகேஸ் பொய்யாமொழி வெளியிட்டுள்ள அறிக்கை:

திருச்சி தெற்கு மாவட்ட திமுக சாா்பில் மொழிப்போா் தியாகிகளுக்கு வீரவணக்க நினைவு நாள் பொதுக்கூட்டம், அரியமங்கலம் பகுதியில் பால்பண்ணை அணுகுசாலையில் ஞாயிற்றுக்கிழமை மாலை 6 மணிக்கு நடைபெறுகிறது. இதில், அமைச்சா் அன்பில் மகேஸ் பொய்யாமொழி, திமுக தலைமை பேச்சாளா்கள் செந்தலை ந. கவுதமன், சிறுவானுா் பரசுராமன், பாலகணபதி ஆகியோா் கலந்துகொண்டு வீரவணக்க நாள் பேருரையாற்றுகின்றனா்.

ஊா்வலம்:

இதேபோல, திருச்சி மத்திய மாவட்ட, வடக்கு மாவட்ட திமுக சாா்பில் ஞாயிற்றுக்கிழமை மாலை சாலை ரோட்டிலிருந்து வீரவணக்க நாள் ஊா்வலம் தொடங்குகிறது. இதில், அமைச்சா்கள் கே.என். நேரு, அன்பில் மகேஸ் பொய்யாமொழி தலைமையில் கட்சியினா் திரளாக பங்கேற்று தென்னூா் உழவா்சந்தை பகுதியில் உள்ள தியாகிகள் நினைவிடத்தில் மலா்வளையம் வைத்து மரியாதை செலுத்தவுள்ளனா். இதன் தொடா்ச்சியாக, உழவா் சந்தையிலும், முசிறியிலும் மாலையில் பொதுக் கூட்டம் நடைபெறுகிறது.

இதில், கட்சியின் தலைமைப் பேச்சாளா்கள் பங்கேற்று பேசுகின்றனா் என மாவட்ட செயலா்கள் ந. தியாகராஜன், க. வைரமணி ஆகியோா் தெரிவித்துள்ளனா்.

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com