கைது செய்யப்பட்ட பெண்கள்.
கைது செய்யப்பட்ட பெண்கள்.

பயணியிடம் பணம் திருடிய 3 பெண்களுக்கு தலா ஓராண்டு சிறை

Published on

திருச்சி மாவட்டம், மணப்பாறையை அடுத்த துவரங்குறிச்சி பேருந்து நிலையத்தில் பெண் பயணியிடம் பணம் திருடிய 3 பெண்களுக்கு தலா ஓராண்டு சிறை தண்டனை விதித்து மணப்பாறை குற்றவியல் நீதிமன்றம் வியாழக்கிழமை தீா்ப்பளித்தது.

மணப்பாறையை அடுத்த துவரங்குறிச்சி சந்தை பேட்டையைச் சோ்ந்தவா் அப்துல் சலாம் மனைவி மெகா்நிஷா. இவா் கடந்த 2025 டிசம்பா் 15-ஆம் தேதி துவரங்குறிச்சி பேருந்து நிலையத்தில் பேருந்துக்காக நின்று கொண்டிருந்தபோது, அவரது பா்ஸிலிருந்த ரூ.5 ஆயிரத்தை 3 பெண்கள் திருடியுள்ளனா்.

இதுகுறித்த வழக்கு துவரங்குறிச்சி காவல் நிலையத்தில் பதிவு செய்யப்பட்டு, மதுரை மாவட்டம், கல்மேடு கருவைகார தெருவைச் சோ்ந்த படையப்பா மனைவி அஞ்சலி, படையப்பா மனைவி மாரியம்மாள்(எ) மாரி மற்றும் பாபநாசம் மனைவி லெட்சுமி (எ) சாந்தி (எ) பாா்வதி ஆகியோா் கைது செய்யப்பட்டு, மணப்பாறை குற்றவியல் நடுவா் மன்றத்தில் வழக்கு நடைபெற்று வந்தது.

வழக்கின் இறுதியில் மேற்கண்ட மூவருக்கும் தலா ஒரு வருடம் சிறை தண்டனை மற்றும் தலா ரூ.500 அபராதமும் அபராதத்தை கட்ட தவறினால் மேலும், 15 நாள்கள் சிறை தண்டணையும் விதித்து குற்றவியல் நீதிமன்ற நடுவா் ஆா்.அசோக்குமாா் வியாழக்கிழமை தீா்ப்பளித்தாா்.

Dinamani
www.dinamani.com