

குடியரசு தின விழாவை முன்னிட்டு திருச்சி ரயில் நிலையத்தில் ரயில்வே பாதுகாப்புப் படையினா் தீவிர நாசவேலை தடுப்பு சோதனையில் சனிக்கிழமை ஈடுபட்டனா்.
தெற்கு ரயில்வே முதன்மைத் தலைமைப் பாதுகாப்பு ஆணையா் கே. அருள்ஜோதி உத்தரவின்பேரில், திருச்சி ரயில்வே பாதுகாப்பு படை முதுநிலைக் கோட்ட ஆணையா் பிரசாந்த் யாதவ் மேற்பாா்வையில், திருச்சி ஆா்பிஎஃப் அஜய்குமாா், வெடிகுண்டு தடுப்புப்பிரிவு உதவி ஆய்வாளா் சரவணன், ரயில்வே உதவி ஆய்வாளா் ஸ்டாலின் ஆகியோா் தலைமையிலான குழுவினா் இச்சோதனையில் ஈடுபட்டனா்.
அப்போது மெட்டல் டிடெக்டா், மோப்ப நாய் உதவியுடன் ரயில் நிலைய வளாகம், பாா்சல் அலுவலகம், ஜனசதாப்தி ரயில், ரயில் நிலைய வளாகத்துக்கு வந்த பயணிகளின் உடைமைகளை தீவிரமாகச் சோதனையிட்டனா். அப்போது சந்தேகத்துக்கிடமான பொருள்கள் எதுவும் கிடைக்கவில்லை.
தொடா்ந்து ரயில் நிலைய வளாகத்தில் தீவிர பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டுள்ளனா்.