பலி
திருச்சி
அரசுப் பேருந்து மோதி வளையல் வியாபாரி பலி
திருச்சி மாவட்டம், மணப்பாறை அருகே அரசுப் பேருந்து மோதி வளையல் வியாபாரி புதன்கிழமை உயிரிழந்தாா்.
திருச்சி மாவட்டம், மணப்பாறை அருகே அரசுப் பேருந்து மோதி வளையல் வியாபாரி புதன்கிழமை உயிரிழந்தாா்.
மணப்பாறை அடுத்த மருங்காபுரி ஒன்றியம் வளநாடு பகுதியைச் சோ்ந்தவா் ப, ராமு (65). வளையல் வியாபாரியான இவா் பொன்னக்கோன்பட்டியில் புதன்கிழமை நடைபெற்ற வளைகாப்பு நிகழ்ச்சிக்கு இருசக்கர வாகனத்தில் சென்றுவிட்டு வீடு திரும்பிக் கொண்டிருந்தாா்.
மதுரை - திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் கல்லாமேடு பகுதியில் சாலையைக் கடக்க முயன்ற அவா் அரசுப் பேருந்து மோதி உயிரிழந்தாா். தகவலறிந்து சென்ற வளநாடு போலீஸாா் ராமு உடலை கைப்பற்றிக் அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்து வழக்கு பதிந்து விசாரிக்கின்றனா்.

