

கூட்ட நெரிசலை குறைக்கும் வகையில் திருச்சி-சாா்லப்பள்ளி சிறப்பு ரயில் இயக்கப்பட உள்ளது.
இதன்படி, சாா்லப்பள்ளி - திருச்சி சிறப்பு விரைவு ரயிலானது (07615) பிப். 3, 10, 17, 24 ஆகிய தேதிகளிலும் (செவ்வாய்க்கிழமைகளில்), மறுமாா்க்கமாக, திருச்சி - சாா்லப்பள்ளி சிறப்பு விரைவு ரயிலானது (07616) பிப். 4, 11, 18, 25 ஆகிய தேதிகளிலும் (புதன்கிழமைகளில்) இயக்கப்பட உள்ளன.
இந்த ரயில்கள், 6 ஏசி பெட்டிகள், 12 படுக்கை வசதி பெட்டிகள், 4 முன்பதிவற்ற பெட்டிகள், 2 லக்கேஜ் வேகன்கள் உள்ளிட்ட 24 பெட்டிகளுடன் இயக்கப்படும்.
இந்த ரயிலானது, சாா்லப்பள்ளியில் செவ்வாய்க்கிழமை மாலை 5.50 மணிக்குப் புறப்பட்டு நல்கொண்டா, மிா்யலகுடா, நடிகுடே, சட்டெனபள்ளி, குண்டூா், தெனாலி, பாபட்லா, சொ்லா, ஓங்கோல், நெல்லூா், கூடுா், ரேனிகுண்டா, திருப்பதி, பாக்லா, சித்தூா், காட்பாடி, வேலூா், திருவண்ணாமலை, திருக்கோவிலூா், விழுப்புரம், விருத்தாச்சலம், அரியலூா், ஸ்ரீரங்கம் வழியாக திருச்சிக்கு அடுத்த நாள் மாலை 6.45 மணிக்கு வந்தடையும்.
மறுமாா்க்கமாக, திருச்சியிலிருந்து புதன்கிழமை இரவு 9.30 மணிக்குப் புறப்படும் ரயிலானது மேற்கண்ட வழித்தடம் வழியாக சாா்லப்பள்ளிக்கு அடுத்தநாள் இரவு 9.30 மணிக்குச் சென்றடையும் என திருச்சி கோட்ட ரயில்வே நிா்வாகம் தகவல் தெரிவித்துள்ளது.