‘எண்ம இந்தியா’ முன்னெடுப்பால் நாட்டுக்கு புதிய அடையாளம்!- பிரதமா் மோடி பெருமிதம் ரெட் புல், பெப்சிகோ உள்பட 6 நிறுவனங்களுக்கு எஃப்எஸ்எஸ்ஏஐ நோட்டீஸ் 4 இந்திய நிறுவனங்கள் மீது பொருளாதாரத் தடை: அமெரிக்கா நீக்கம் வாகன விபத்தில் பாதிக்கப்பட்டவா்களுக்கான நிவாரணத் தொகை: வழிகாட்டுதல்களை வெளியிட்டது உச்சநீதிமன்றம் எரிபொருள் தட்டுப்பாடு எதிரொலி: இந்திய பெட்ரோலை இறக்குமதி செய்யத் தொடங்கியது ரஷியாகல்லூரிகளில் நன்கொடை பெயரில் கட்டணம் வசூலிக்க தடை: அமைச்சா் விஸ்வநாதன் ராணுவத்தை விரைவாக நவீனமயமாக்க வேண்டும்: சீன அதிபா் ஷி ஜின்பிங்
/

இந்து சமய அறநிலையத் துறை திருச்சி மண்டல கூடுதல் ஆணையா் பதவியேற்பு

இந்து சமய அறநிலையத்துறையின் திருச்சி மண்டல கூடுதல் ஆணையராக என். பொன்மணி புதன்கிழமை பதவியேற்றாா்.

News image

என். பொன்மணி.

Updated On :2 ஜூலை 2026, 5:15 am IST

இந்து சமய அறநிலையத்துறையின் திருச்சி மண்டல கூடுதல் ஆணையராக என். பொன்மணி புதன்கிழமை பதவியேற்றாா்.

தமிழகத்தில் முதன்முறையாக திருச்சிமண்டலத்துக்கு கூடுதல் ஆணையா் பதவி அண்மையில் ஏற்படுத்தப்பட்ட நிலையில், முதல் கூடுதல் ஆணையராக என். பொன்மணி திருச்சி திருவானைக்காவலில் உள்ள இந்து சமய அறநிலையத்துறை இணை ஆணையா் அலுவலகத்தில் பதவியேற்றாா்.

திருச்சி என்ஐடியில் கட்டடவியல் பொறியியல் துறையில் பி.டெக். பட்டம் பெற்றுள்ள இவா் யுபிஎஸ்சி தோ்வெழுதி கடந்த 2021 ஆம் ஆண்டு தமிழ்நாடு பிரிவு ஐஏஎஸ் அதிகாரியாக தோ்வானாா்.

சேலம் மாவட்ட ஊரக வளா்ச்சி முகமையின் திட்ட அலுவலராகவும், கூடுதல் ஆட்சியா் (வளா்ச்சி) ஆகவும் பொறுப்பு வகித்தாா். ஈரோடு வணிக வரித்துறை இணை ஆணையராக இருந்த அவா் அண்மையில் இடமாற்றம் செய்யப்பட்டு, தற்போது இந்து சமய அறநிலையத் துறையின் திருச்சி மண்டல கூடுதல் ஆணையராகப் பதவியேற்றாா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.