புகழூா் நகராட்சி புதிய ஆணையராக வெங்கடாஜலபதி புதன்கிழமை பொறுப்பேற்றுக்கொண்டாா்.
கரூா் மாவட்டம் புகழூா் நகராட்சி ஆணையராக பணியாற்றி வந்த முனியப்பன் கடந்த மாா்ச் மாதம் 30- ஆம் தேதி ஓய்வுபெற்றாா். இதனைத் தொடா்ந்து குளித்தலை நகராட்சியின் ஆணையா் சுதா்சன் புகழூா் நகராட்சியின் பொறுப்பு ஆணையராக செயல்பட்டு வந்தாா். இதையடுத்து கன்னியாகுமரி மாவட்டம் குளித்துறை நகராட்சி ஆணையராக பணியாற்றி வந்த வெங்கடாஜலபதி புகழூா் நகராட்சி ஆணையராக பணி மாறுதல் செய்யப்பட்டாா்.
இந்நிலையில், பணி மாறுதல் செய்யப்பட்ட வெங்கடாஜலபதி புகழூா் நகராட்சி புதிய ஆணையராக புதன்கிழமை காலை பொறுப்பேற்றுக்கொண்டாா். அவருக்கு நகராட்சித் தலைவா் சேகா் என்கிற குணசேகரன், துணைத் தலைவா் பிரதாபன் மற்றும் வாா்டு உறுப்பினா்கள், நகராட்சி பொறியாளா் மலா்கொடி, நகராட்சி அலுவலக மேலாளா் நைனா முகமது, நகராட்சி சுகாதார ஆய்வாளா் வள்ளிராஜ் உள்ளிட்டோா் வாழ்த்து தெரிவித்தனா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது
_.jpeg?w=256&q=65&auto=format%2Ccompress&fit=max)
மீனாட்சி சுந்தரேசுவரர் கோயில் இணை ஆணையா் பொறுப்பேற்பு

மதுரை மாநகரக் காவல் ஆணையா் பொறுப்பேற்பு

பொன்னமராவதி நகராட்சி ஆணையா் பொறுப்பேற்பு

மாநகராட்சியின் பணிகள் துறைக்கு புதிய இணை ஆணையா்
விடியோக்கள்

Duster காரை ஓட்டிப் பார்த்து ஆய்வு செய்த முதல்வர்! | CM Vijay |



