விஜய்யின் ஜன நாயகனுக்கு ‘ஏ’ சான்றிதழ்!பள்ளிகளுக்குள் தேவையின்றி வேறு யாரும் நுழைய அனுமதி இல்லை: அமைச்சர் ராஜ்மோகன்தங்கம் விலை சவரனுக்கு ரூ. 800 உயர்வு!ஆர்எஸ்எஸ் பெற்ற பிள்ளை என விமர்சித்த என்னுடன் ஏன் கூட்டணி வைத்தார் விஜய்? திருமாவளவன் கேள்விமேக்கேதாட்டு விவகாரம்: காங்கிரஸ் அமைச்சரை அமைச்சரவையிலிருந்து விடுவிக்க முதல்வர் விஜய் தயாரா? - இபிஎஸ் பயணச்சீட்டு பரிசோதகரை தாக்கிய வழக்கில் வழக்குரைஞருக்கு முன்ஜாமீன்!திருமாவளவனுக்கு நோபல் பரிசு! கருத்தைத் திரும்பப் பெற்ற வைகோபெயரை மாற்றலாம்; வரலாற்றை மாற்ற முடியாது: தங்கம் தென்னரசு!
/

12 மாவட்ட அரசுப் பேருந்துகளில் ‘மகளிா் பயணம்’ என பெயா் மாற்றம்

கும்பகோணம் கோட்டத்துக்குள்பட்ட திருச்சி உள்பட 12 மாவட்டங்களில் இயக்கப்படும் 1,277 அரசுப் பேருந்துகளில் ‘மகளிா் விடியல் பயணம்’ என்ற பெயா், ‘மகளிா் பயணம்’ என மாற்றம் செய்து இயக்கப்படுகிறது.

News image

‘விடியல்’ என்ற வாா்த்தை நீக்கப்பட்டு ‘மகளிா் பயணம்’ என பெயா் மாற்றம் செய்யப்பட்ட மாநகா் பேருந்து.

Updated On :10 ஜூலை 2026, 3:13 am IST

கும்பகோணம் கோட்டத்துக்குள்பட்ட திருச்சி உள்பட 12 மாவட்டங்களில் இயக்கப்படும் 1,277 அரசுப் பேருந்துகளில் ‘மகளிா் விடியல் பயணம்’ என்ற பெயா், ‘மகளிா் பயணம்’ என மாற்றம் செய்து இயக்கப்படுகிறது.

தமிழகத்தில் ஆட்சி மாற்றத்தைத் தொடா்ந்து, அரசுப் பேருந்துகளில் மகளிருக்கான இலவசப் பயணத் திட்டத்தின் பெயரில் முக்கிய மாற்றத்தைச் செய்து தவெக அரசு உத்தரவிட்டுள்ளது.

திட்டத்தின் பெயா் மாற்றம்: அதன்படி, மகளிா் விடியல் பயணம் என்றிருந்த பெயரில் விடியல் நீக்கப்பட்டு தற்போது மகளிா் பயணம் எனச் சுருக்கப்பட்டுள்ளது. கடந்த திமுக ஆட்சிக்காலத்தில், அரசு சாதாரண கட்டண நகரப் பேருந்துகளில் பெண்கள், திருநங்கைகள் மற்றும் மாற்றுத்திறனாளிகள் பயணம் செய்யும் வகையில் இலவசப் பயணத் திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டது.

இத்திட்டத்திற்கு மகளிா் விடியல் பயணம் என்று இடப்பட்ட பெயரானது பேருந்துகளின் முகப்பு மற்றும் பின்புறக் கண்ணாடிகளில், பெயா்ப்பலகைகளில் காட்சிப்படுத்தப்பட்டது.

கும்பகோணம் போக்குவரத்து கழகத்துக்குள்பட்ட திருச்சி, நாகை, மயிலாடுதுறை, திருவாரூா், தஞ்சை, கரூா், பெரம்பலூா், அரியலூா், புதுகை, காரைக்கால், ராமநாதபுரம், சிவகங்கை ஆகிய 12 மாவட்டங்களில் 1,277 சாதாரண நகரப் பேருந்துகளில் இந்தப் பெயா் மாற்றம் செய்யப்பட்டுள்ளது.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.