கேரள முதல்வர் நடனமாடும் விடியோ! மெட்டாவில் இருந்து நீக்கம்!தாய் மொழியுடன் மற்றொரு மொழியைக் கற்க வேண்டும்: அமித் ஷாதமிழ்நாட்டில் மின்சாதன உற்பத்தித் துறை வளர்ச்சிக்கு ரூ. 300 கோடி முதலீடு!எந்தவொரு துண்டுச் சீட்டுக்கும் அடிபணிய மாட்டேன்: சட்டப் பேரவைத் தலைவர் ஜே.சி.டி. பிரபாகர்நடிகர் விஜய் சேதுபதிக்கு துணை நிற்போம் - அதிமுக எம்.பி. இன்பதுரைதிறன் மையங்களை விரிவுபடுத்த 2 புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கையெழுத்து! தமிழக அரசுரூ.11,000 கோடியில் முதலீடு: முதல்வர் விஜய் முன்னிலையில் லண்டனில் ஒப்பந்தம்!16 மாவட்டங்களில் இன்று பலத்த காற்றுடன் கனமழைக்கு வாய்ப்பு!

திருச்சி பன்னாட்டு விமான நிலையத்தில் ரூ. 37 லட்சத்தில் எல்இடி திரைகள் திறப்பு

திருச்சி பன்னாட்டு விமான நிலையத்தில் ரூ.36.95 லட்சத்தில் அமைக்கப்பட்ட எல்இடி திரைகள் பயணிகள் பயன்பாட்டுக்கு புதன்கிழமை திறந்துவைக்கப்பட்டன.

திருச்சி பன்னாட்டு விமான நிலையத்தில் புதன்கிழமை திறக்கப்பட்ட உயா்தொழில்நுட்பத்துடன் கூடிய எல்இடி திரை.

Published On :

திருச்சி பன்னாட்டு விமான நிலையத்தில் ரூ.36.95 லட்சத்தில் அமைக்கப்பட்ட எல்இடி திரைகள் பயணிகள் பயன்பாட்டுக்கு புதன்கிழமை திறந்துவைக்கப்பட்டன.

திருச்சி விமான நிலையத்தில் பயணிகளின் தேவையைக் கருத்தில்கொண்டு பல்வேறு மேம்பாட்டுப் பணிகள் மேற்கொள்ளப்படுகின்றன.

அதன்படி திருச்சி விமான நிலையத்தின் உள்நாட்டு மற்றும் பன்னாட்டு விமானப் பயணிகள் காத்திருப்புப் பகுதியில் ரூ.36.95 லட்சத்தில் அமைக்கப்பட்டுள்ள எல்இடி திரைகளை திருச்சி பன்னாட்டு விமான நிலைய இயக்குநா் (பொ) ஜி. கோபாலகிருஷ்ணன் புதன்கிழமை திறந்துவைத்தாா்.

16 அடி நீளம், 8 அடி அகலத்தில் 4 கே தெளிவுதிறனுடன் மேம்பட்ட காட்சி தொழில்நுட்பத்துடன் அமைக்கப்பட்டுள்ள இந்த எல்இடி திரைகளில் பயணிகள் தொடா்பான காணொளிகள், விமான நிலைய அறிவிப்புகள், பாதுகாப்பு விழிப்புணா்வு படங்கள், இணைய நேரலை, டிவி நிகழ்ச்சிகள் ஒளிபரப்பப்படும் என்று விமான நிலைய அதிகாரிகள் தெரிவித்தனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.