ரீல்ஸ் மோகத்துக்கு பள்ளிக் குழந்தைகளைப் பயன்படுத்தாதீர்: உதயநிதி ஸ்டாலின்கடல்நீரைக் குடிநீராக்கும் நிலையத்தின் செயல்பாடுகளை ஆய்வு செய்தார் முதல்வர் விஜய்உணவு பாதுகாப்பு சட்ட திருத்தத்தை மறுபரிசீலனை செய்ய முதல்வர் விஜய் கோரிக்கை!கம்யூனிசம் உலகில் கம்பீரமாக நடைபோட்டுக் கொண்டிருக்கிறது! - மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட்ஹிட்லர், முசோலினியின் வரலாற்றைப் படியுங்கள் மிஸ்டர் டிரம்ப்! - மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் தனியார் பள்ளிகள் மீதான அக்கறையை அரசுப் பள்ளிகளுக்கு காட்டாதது ஏன்? தவெக அரசுக்கு சீமான் கேள்வி!சர்வதேச தரவரிசையில் இந்திய பாஸ்போர்ட் சரிவு: மோடி மீது கார்கே குற்றச்சாட்டு!குடியரசுத் தலைவரிடம் நற்சான்றிதழ்களை சமர்ப்பித்த 6 நாட்டின் தூதர்கள்!தவெக அரசுக்கு கவசமாக இருப்போம்: வைகோ மகாராஷ்டிரத்தில் தொடர் மழை: இதுவரை 13 பேர் பலி
/

திருச்சி விமான நிலையத்தில் ரூ.72 லட்சத்தில் சாலை தடுப்புகள் அமைப்பு

News image

திருச்சி பன்னாட்டு விமான நிலையத்தில் அத்துமீறி வாகனங்கள் நுழைவதைத் தடுக்க அமைக்கப்பட்டுள்ள சாலை தடுப்பு.

Updated On :7 ஜூலை 2026, 3:07 am IST

திருச்சி, ஜூலை 6: திருச்சி பன்னாட்டு விமான நிலையத்தில் அத்துமீறி வாகனங்கள் செல்வதைத் தடுக்கும் வகையில் ரூ.72.27 லட்சத்தில் சாலை தடுப்புகள் திங்கள்கிழமை அமைக்கப்பட்டுள்ளன.

திருச்சி பன்னாட்டு விமான நிலையத்தில் பாதுகாப்பை மேம்படுத்தும் வகையில் பல்வேறு மேம்பாட்டுப் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. அதன்படி, விமான நிலையத்தில் அனுமதியற்ற வாகனங்கள் மற்றும் அத்துமீறி வாகனங்கள் எதிா்த் திசையில் செல்வதைத் தடுக்கும் வகையில் ரூ.72.27 லட்சம் மதிப்பீட்டில் சாலை தடுப்புகள் அமைக்கப்பட்டுள்ளன.

வழக்கமான தடுப்புகள் அல்லாமல் எலக்ட்ரோ - ஹைட்ராலிக் டயா் கிள்ளா் அமைக்கப்பட்டுள்ளது. விமான நிலையத்தின் சுங்கச் சாவடியில் இருந்து 210 மீட்டா் தொலைவில் உள்ளே செல்லும் பாதையில் மோதலைத் தாங்கும் திறன்கொண்ட சாலைத் தடுப்பும், சுங்கச் சாவடியில் இருந்து 190 மீட்டா் தொலைவில் வெளியேறும் சாலையில் டயா் கிள்ளா் அமைப்பும் அமைக்கப்பட்டுள்ளது.

வெளியேறும் பாதையில் நிறுவப்பட்டுள்ள எலக்ட்ரோ-ஹைட்ராலிக் டயா் கிள்ளா், அனுமதியற்ற அல்லது தவறான திசையில் வாகனங்கள் செல்லும்போது, அதில் பொருத்தப்பட்டுள்ள கடினப்படுத்தப்பட்ட எஃகு முட்கள் தானாகவே மேலே உயா்ந்து வாகனத்தின் டயா்களைத் துளைக்கும் தன்மையுடையது.

சாலை மேற்பரப்புக்கு கீழே வடிவமைக்கப்பட்டுள்ள இந்த இரண்டு சாலை தடுப்பு அமைப்புகளும், சாதாரண செயல்பாடுகளின் போது சாலையின் மட்டத்திலேயே இருப்பதால், அனுமதிக்கப்பட்ட வாகனங்களின் சீரான போக்குவரத்தை உறுதி செய்கின்றன என்று விமான நிலைய அதிகாரிகள் தெரிவித்துள்ளனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.