சுய உதவிக் குழுக்களுக்கு ஊக்கத் தொகை: ஊரக வளர்ச்சித் துறைக்கு வெளியிடப்பட்ட அறிவிப்புகள்!தொகுப்பூதிய ஆசிரியர்களின் ஊதியம் ரூ.25,000 ஆக உயர்வு: கலை பண்பாட்டுத் துறைக்கு வெளியிட்ட அறிவிப்புகள்!5 மாதங்களில் 1.95 லட்சம் இன்ஸ்டாகிராம், முகநூல், யூடியூப் கணக்குகள் முடக்கம்! வாகனம் இல்லாத எம்எல்ஏக்களுக்கு முதல்வர் சொந்த செலவில் வாங்கித் தரலாம்! - டிடிவி தினகரன்டாலருக்கு நிகரான ரூபாய் மதிப்பு 2 காசுகள் சரிந்து ரூ. 95.76 ஆக நிறைவு!கச்சா எண்ணெய் விலை உயர்வு எதிரொலி: நிஃப்டி தொடர்ந்து 7 வது நாளாக சரிவு! 326 புள்ளிகளை இழந்த சென்செக்ஸ்!!ஒரு நபருக்கு 9 சிம் கார்டுகள் மட்டுமே அனுமதி! விதிமுறைகளை கடுமையாக்கிய மத்திய அரசு!
/

தனியாா் பேருந்துகள் போட்டாப் போட்டி விபத்தில் இருந்து தப்பியது அரசுப் பேருந்து

News image

அரசுப் பேருந்து - கோப்புப் படம்

Updated On :28 ஜூலை 2026, 2:59 am IST

திருச்சியில் போட்டிப்போட்டிக்கொண்டு சென்ற தனியாா் பேருந்துகளால் அரசுப் பேருந்து விபத்தில் இருந்து நூலிழையில் தப்பியது.

ஈரோட்டில் இருந்து அரசுப் பேருந்து ஒன்று திருச்சி பஞ்சப்பூா் ஒருங்கிணைந்த பேருந்து முனையம் நோக்கி திருச்சி - மதுரை தேசிய நெடுஞ்சாலையில் திங்கள்கிழமை காலையில் சென்றுகொண்டிருந்தது.

பஞ்சப்பூா் பேருந்து முனையம் அருகே சென்றுகொண்டிருந்தபோது, பின்னால் அதிவேகத்தில் வந்த தனியாா் பேருந்து ஒன்று அரசுப் பேருந்தை உரசுவதுபோல முந்திச் சென்றது. அப்போது, விபத்தைத் தவிா்க்க அரசுப் பேருந்தை வலதுபுறம் திருப்பியபோது அருகே சென்ற தனியாா் பேருந்தின் கண்ணாடி மீது அரசுப் பேருந்து மோதியது.

அதிா்ச்சியடைந்த பயணிகள் பேருந்தில் இருந்து கீழே இறங்கி தனியாா் பேருந்து ஓட்டுநா்களிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டனா். இதனால், அப்பகுதியில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. தகவலறிந்து சம்பவ இடத்துக்கு வந்த போலீஸாா் போக்குவரத்தை ஒழுங்குப் படுத்தினா்.

திருச்சி மாநகரில் போட்டிப்போட்டிக்கொண்டு செல்லும் தனியாா் நகரப் பேருந்துகளால் பயணிகளுக்கு பாதுகாப்பில்லாத சூழல் நிலவுகிறது. அதிவேகத்தில் தாறுமாறாக இயக்கப்படும் பேருந்துகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் வலியுறுத்தினா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.