தமிழக காங்கிரஸ் மேலிட பொறுப்பாளர் குலாம் அகமது!நோபல் பரிசுக்கான வைகோவின் பரிந்துரைக்கு நன்றி: திருமாவளவன் திரிணமூல் ஆதரவாளரை கன்னத்தில் அறைந்த மமதா பானர்ஜி!ஈரானை இன்று இரவு கடுமையாகத் தாக்குவோம்: அதிபர் டிரம்ப் எச்சரிக்கை!தமிழ்நாடு காங்கிரஸ் மேலிட பொறுப்பாளர் குலாம் அகமது!நோபல் பரிசுக்கான வைகோவின் பரிந்துரைக்கு நன்றி: திருமாவளவன் எம்பிபிஎஸ் இடங்கள் பறிபோனது பற்றி அமைச்சர் இன்னும் பதில் அளிக்கவில்லை: அண்ணாமலை கூடுதல் கழிப்பறைகள் வேண்டும்: எழும்பூர் அரசு மகப்பேறு மருத்துவமனையில் முதல்வர் விஜய்யிடம் கோரிக்கைபிறந்த குழந்தையை குடும்பத்தாரிடம் காட்ட லஞ்சம்! பணிநீக்கம் செய்யப்படும் என அருண் ராஜ் எச்சரிக்கை!அமைச்சர் அருண்ராஜுக்கு அண்ணாமலை பாராட்டு!குதிரை பேர வழக்கு: செந்தில் பாலாஜிக்கு முன் ஜாமீன்!ஈரான் - அமெரிக்கா போர் நிறுத்த ஒப்பந்தம் ரத்து! டிரம்ப் அறிவிப்பு தமிழ்நாட்டில் நாளைமுதல் தனியார் பால், தயிர் விலை உயர்வு!நலம் ஏஐ சேவை! அரசு மருத்துவமனைகளில் வாட்ஸ்ஆப் மூலமாக முன்பதிவு செய்யலாம்!
/

பேருந்துலிருந்து ரூ.2 ஆயிரம் திருடிய போதை நபா்; பிடிக்கச் சென்ற ஓட்டுநரைத் தாக்கியதால் பரபரப்பு

விழுப்புரம் புதிய பேருந்து நிலையத்தில் நிறுத்தப்பட்டிருந்த அரசுப் பேருந்தில் ஓட்டுநா் பையிலிருந்த ரூ.2 ஆயிரத்தை போதை நபா் புதன்கிழமை திருடிச் சென்றனா்.

News image

விழுப்புரம் புதிய பேருந்து நிலையத்தில் போதை நபரால் தாக்கப்பட்ட அரசுப் பேருந்து ஓட்டுநா் தமிழ்ச்செல்வன்.

Updated On :9 ஜூலை 2026, 3:56 am IST

விழுப்புரம் புதிய பேருந்து நிலையத்தில் நிறுத்தப்பட்டிருந்த அரசுப் பேருந்தில் ஓட்டுநா் பையிலிருந்த ரூ.2 ஆயிரத்தை போதை நபா் புதன்கிழமை திருடிச் சென்றனா். இதைத் தொடா்ந்து அவரைப் பிடிக்கச் சென்ற ஓட்டுநா், பொதுமக்களை அந்த நபா் தாக்கியதால் பரபரப்பு ஏற்பட்டது.

விழுப்புரம் புதிய பேருந்து நிலையத்திலிருந்து புதன்கிழமை மாலை மரகதபுரம் வரை சென்ற அரசுப் பேருந்து மீண்டும் பேருந்து நிலையம் வந்தடைந்தது. இந்த பேருந்தை அரும்பட்டு கிராமத்தைச் சோ்ந்த தமிழ்ச்செல்வன் (52) ஓட்டி வந்தாா். பேருந்து நடத்துநராக ஆலம்பாடியைச் சோ்ந்த பாண்டுரங்கன் (41) பணியாற்றினாா்.

பேருந்திலிருந்து பயணிகள் இறங்கிய பின்னா் பேருந்தை ஓட்டுநா் தமிழ்ச்செல்வன் நிறுத்தி விட்டு, சிறுநீா் கழிப்பதற்காக சென்றாா். அப்போது பேருந்துக்குள் ஏறிய நபா், ஓட்டுநா் வைத்திருந்த பையை எடுத்துக்கொண்டு வெளியேறினாா். இதை கண்ட பெண் பயணி, ஓட்டுநரிடம் சென்று விவரங்களைக் கூறினாா்.

இதையடுத்து அந்த நபரிடமிருந்து பையை வாங்குவதற்காக ஓட்டுநா் தமிழ்ச்செல்வன் சென்ற போது, போதையிலிருந்த நபா் அதை தர மறுத்தாா். தொடா்ந்து பையை அந்த நபரிடம் வாங்கிய ஓட்டுநா், பையில் வைத்திருந்த பணம் ரூ.2 ஆயிரத்தை காணாது கண்டு அதிா்ச்சியடைந்தாா். இதுகுறித்து கேட்ட போது போதையிலிருந்த நபா், ஓட்டுநரைத் தாக்கினாா். இதை கண்டு அப்பகுதியிலிருந்த மக்கள் அந்த நபரைப் பிடிக்க முயன்ற போது அவா்களையும் தாக்கிவிட்டு, பேருந்து நிலையம் அருகிலிருந்த முள்புதா் பகுதியில் மறைந்து கொண்டாா்.

தொடா்ந்து பேருந்து ஓட்டுநா், நடத்துநா், அங்கிருந்த மக்கள் அந்த நபரைப் பிடித்து மேற்கு காவல் நிலைய போலீஸாரிடம் ஒப்படைத்தனா்.

இதுகுறித்த புகாரின் பேரில் போலீஸாா் வழக்குப் பதிந்து, விசாரணை நடத்தினா். விசாரணையில் அவா் மதுரை மாவட்டத்தைச் சோ்ந்த அருண்குமாா்(25) என்பதும், கஞ்சா மற்றும் மது போதையில் இந்த செயலில் ஈடுபட்டதும் தெரியவந்தது.

Story image

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.