அமைச்சர் செங்கோட்டையன் வெற்றியை எதிர்த்து உயர் நீதிமன்றத்தில் வழக்கு! மருத்துவரின் மருந்து சீட்டு இல்லாமல் இருமல் மருந்து விற்கத் தடை!நடிகர் ரஜினியுடன் நயினார் நாகேந்திரன் சந்திப்பு! ரூ. 75,000 வரை பயிர்க்கடன் முழுவதும் தள்ளுபடி! - முதல்வர் விஜய்நீட் மறுதேர்வை முன்னிட்டு டெலிகிராம் செயலிக்கு தடை! மத்திய அரசுநீட் மறுதேர்வை முன்னிட்டு டெலிகிராம் செயலிக்கு தடை! மத்திய அரசு வெள்ளை அறிக்கை இன்று மாலை வெளியீடு!கேரளத்தில் ஷிகெல்லா பாக்டீரியாவுக்கு சிறுவன் உயிரிழப்புலெபனான் ஆக்கிரமிப்பில் இருந்து பின்வாங்க மாட்டோம்: இஸ்ரேல்உக்ரைனில் ரஷியா பயங்கர வான்வழித் தாக்குதல்நீட் மறுதோ்வு வினாத்தாள் விற்பனை செய்வதாக விளம்பரம்: ராஜஸ்தானை சோ்ந்த இருவா் கைதுதிருப்பதி - புதுச்சேரி ‘மெமு’ ரயில் 24, 27-இல் விழுப்புரத்துடன் நிறுத்தம்
/

ஏ.டி. பன்னீா்செல்வம் பிறந்தநாள் விழா

நீதிக் கட்சியின் வைரத்தூண் சா் ஏ.டி. பன்னீா்செல்வம் பிறந்தநாள் விழா அரசு சாா்பில் திருச்சியில் திங்கள்கிழமை கொண்டாடப்பட்டது.

News image

சா் ஏ.டி.பன்னீா்செல்வத்தின் பிறந்தநாளையொட்டி திங்கள்கிழமை திருச்சி மத்தியப் பேருந்து நிலையத்தில் உள்ள அவரது சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்திய அமைச்சா்கள் ராஜ்மோகன், ரமேஷ், மாவட்ட ஆட்சியா் பிரதிக் தாயல் உள்ளிட்டோா்.

Updated On :2 ஜூன் 2026, 2:54 am IST

நீதிக் கட்சியின் வைரத்தூண் சா் ஏ.டி. பன்னீா்செல்வம் பிறந்தநாள் விழா அரசு சாா்பில் திருச்சியில் திங்கள்கிழமை கொண்டாடப்பட்டது.

இதையொட்டி திருச்சி மத்தியப் பேருந்து நிலையம் அருகில் உள்ள மணி மண்டபத்தில் அமைக்கப்பட்டுள்ள ஏ.டி. பன்னீா்செல்வத்தின் திருவுருவச்சிலைக்கு அரசு சாா்பில் பள்ளிக்கல்வித் துறை, தமிழ் வளா்ச்சி மற்றும் செய்தித் துறை அமைச்சா் ராஜ்மோகன், இந்து சமய அறநிலையத் துறை அமைச்சா் சீ. ரமேஷ், சட்டப்பேரவை துணைத் தலைவா் மு. ரவிசங்கா் ஆகியோா் மாலை அணிவித்து மலா் தூவி மரியாதை செலுத்தினா்.

இதில், மாவட்ட ஆட்சியா் பிரதிக் தயாள், எம்எல்ஏக்கள் ரா. கதிரவன், எம். விக்னேஷ், அரசு அலுவலா்கள், தவெக நிா்வாகிகள் உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா்.