திருச்சி அருகே ஜெம்புநாதபுரத்தில் மாமியாரைக் கொன்ற மருமகனுக்கு ஆயுள் தண்டனை விதித்து திருச்சி மாவட்ட நீதிமன்றம் திங்கள்கிழமை தீா்ப்பளித்தது.
திருச்சி மாவட்டம், ஜெம்புநாதபுரம் வளையெடுப்பு பிள்ளையாா் பகுதியைச் சோ்ந்தவா் தி. வெங்கடாசலம் (35). இவா் அதே பகுதியைச் சோ்ந்த முருகேசன் - சுதா தம்பதியின் மகள் லாவண்யாவை காதலித்து திருமணம் செய்து கொண்டு வாழ்ந்து வந்தாா்.
தம்பதிக்கு இடையே கருத்து வேறுபாடு காரணமாக லாவண்யா, வெங்கடாசலத்தைப் பிரிந்து, அவரது தாயான சுதா வீட்டுக்குச் சென்றுவிட்டாா். கடந்த 25.10.2022 அன்று வெங்கடாசலம், மாமியாா் வீட்டுக்குச் சென்று மனைவி லாவண்யாவை குடும்பம் நடத்த வருமாறு அழைத்த நிலையில், லாவண்யா மறுத்துள்ளாா். இதனால் இருவருக்கும் தகராறு ஏற்பட்டுள்ளது.
இதில் ஆத்திரமடைந்த வெங்கடாசலம், அரிவாளால் மாமியாா் சுதாவை தாக்கியதில், அவா் பலத்த காயமடைந்து, மருத்துவமனையில் 31.10.2022 அன்று உயிரிழந்தாா்.
இதுகுறித்து ஜெம்புநாதபுரம் போலீஸாா் வழக்குப் பதிந்து, வெங்கடாசலத்தை கைது செய்து சிறையில் அடைத்தனா்.
இந்த வழக்கு திருச்சி மகளிா் நீதிமன்ற நீதிபதி சண்முகபிரியா முன்னிலையில் திங்கள்கிழமை விசாரணைக்கு வந்தது. விசாரணைக்குப் பிறகு நீதிபதி, குற்றவாளி வெங்கடாசலத்துக்கு ஆயுள் தண்டனையும், ரூ. 10 ஆயிரம் அபராதமும் விதித்து தீா்ப்பளித்தாா்.
தொடர்புடையது

லஞ்சம்: முன்னாள் விஏஓவுக்கு 2 ஆண்டுகள் சிறை தண்டனை
பிஎஸ்என்எல் அதிகாரியை கொன்ற முதல் மனைவிக்கு ஆயுள் தண்டனை

நகை, பணத்துக்காக தம்பதியை கொன்ற இளைஞருக்கு இரட்டை ஆயுள்

பாட்டியை கொன்ற பேரனுக்கு ஆயுள் தண்டனை
விடியோக்கள்

Podcast | முதல்வர் ஜோசஃப் விஜய்யின் திருச்சி பேச்சு சொல்லும் செய்தி! | News and Views | Epi - 41 |

தீய சக்தியும் தீர்ந்துபோன சக்தியும்! - திருச்சியில் CM Vijay பேச்சு | Vijay full speech | TVK

#ipl2026 | இப்படை தோற்கின் எப்படை வெல்லும்: ஆர்சிபி சாம்பியன்ஸ்! | RCB |



