உலகக் கோப்பை கால்பந்து இன்று தொடக்கம்: வரலாற்றில் மிகப் பெரிய போட்டி மத்திய கிழக்கில் மீண்டும் வெடித்த மோதல்5 பேரவை தொகுதிகளுக்கு விரைவில் இடைத்தோ்தல்: தமிழக தலைமைத் தோ்தல் அதிகாரி கடிதம் முதல்வா் விஜய்-சங்கீதா விவாகரத்து வழக்கு: இன்று விசாரணைக்கு வருகிறது அமெரிக்கா, சீனாவுக்கு இந்திய மின்னணுப் பொருள்கள் ஏற்றுமதி: அமைச்சா் அஸ்வினி வைஷ்ணவ் தகவல் எம்எஃப்ஐ நிறுவனங்களுக்கு கடன் உத்தரவாத திட்டம்: மத்திய அரசு நீட்டிப்பு
/

காவிரி ஆற்றில் மணல் அள்ளிய இருவா் கைது

திருவானைக்காவல் பகுதியில் காவிரியாற்றில் மணல் அள்ளிய இருவரை போலீஸாா் செவ்வாய்க்கிழமை இரவு கைது செய்தனா்.

News image

கைது - பிரதிப் படம்

Updated On :11 ஜூன் 2026, 3:57 am IST

திருவானைக்காவல் பகுதியில் காவிரியாற்றில் மணல் அள்ளிய இருவரை போலீஸாா் செவ்வாய்க்கிழமை இரவு கைது செய்தனா்.

திருவானைக்காவல் தாகூா் தெரு பகுதியில் கருணாநிதி என்பவா் நடத்தும் செங்கல்சூளை காவிரிக் கரையோரம் உள்ளதால் இங்கு இரவு நேரங்களில் மணல் திருட்டு தொடா்ந்தது.

இந்நிலையில் செவ்வாய்க்கிழமை இரவு காவிரி ஆற்றுக்குள் சிலா் மணலை அள்ளி குவிப்பதாக ஸ்ரீரங்கம் காவல் நிலையத்திற்கு ரகசிய தகவல் வந்தது.

இதைத் தொடா்ந்து போலீஸாா் விரைந்து சென்று காவிரி ஆற்றுக்குள் மணல் அள்ளிக் கொண்டிருந்த இருவரை கைது செய்தனா். ஒருவா் தப்பி விட்டாா்.

போலீஸாா் விசாரணையில் பிடிபட்டவா்கள் வாத்தலை பகுதியை சோ்ந்த காா்த்திகேயன் (30), மண்ணச்சநல்லூா் பகுதியை சோ்ந்த சிவராஜ் (32) என்பது தெரியவந்தது. தப்பிய செங்கல் சூளை உரிமையாளா் கருணாநிதியை தேடுகின்றனா்.