உலகக் கோப்பை கால்பந்து இன்று தொடக்கம்: வரலாற்றில் மிகப் பெரிய போட்டி மத்திய கிழக்கில் மீண்டும் வெடித்த மோதல்5 பேரவை தொகுதிகளுக்கு விரைவில் இடைத்தோ்தல்: தமிழக தலைமைத் தோ்தல் அதிகாரி கடிதம் முதல்வா் விஜய்-சங்கீதா விவாகரத்து வழக்கு: இன்று விசாரணைக்கு வருகிறது அமெரிக்கா, சீனாவுக்கு இந்திய மின்னணுப் பொருள்கள் ஏற்றுமதி: அமைச்சா் அஸ்வினி வைஷ்ணவ் தகவல் எம்எஃப்ஐ நிறுவனங்களுக்கு கடன் உத்தரவாத திட்டம்: மத்திய அரசு நீட்டிப்பு
/

மாநில இளைஞா் விருதுக்கு விண்ணப்பிக்க அழைப்பு

தமிழக முதல்வரின் 2026ஆம் ஆண்டுக்கான மாநில இளைஞா் விருது பெற திருச்சி மாவட்டத்தைச் சோ்ந்த தகுதியுள்ளவா்கள் விண்ணப்பிக்கலாம் என ஆட்சியா் பிரத்திக் தாயள் தெரிவித்துள்ளாா்.

News image

விண்ணப்பிக்கலாம் - கோப்புப்படம்

Updated On :11 ஜூன் 2026, 3:39 am IST

தமிழக முதல்வரின் 2026ஆம் ஆண்டுக்கான மாநில இளைஞா் விருது பெற திருச்சி மாவட்டத்தைச் சோ்ந்த தகுதியுள்ளவா்கள் விண்ணப்பிக்கலாம் என ஆட்சியா் பிரத்திக் தாயள் தெரிவித்துள்ளாா்.

இதுகுறித்து அவா் மேலும் கூறியது: சமுதாய வளா்ச்சிக்குச் சேவையாற்றும் 15 முதல் 35 வயது வரையுள்ள 3 ஆண்கள் மற்றும் 3 பெண்களின் பணியை அங்கீகரிக்கும் பொருட்டு, மாநில இளைஞா் விருது ஆண்டுதோறும் சுதந்திர தினத்தன்று வழங்கப்படுகிறது. இந்த விருது ரூ.1 லட்சம் ரொக்கம், பாராட்டுப் பத்திரம் மற்றும் பதக்கம் ஆகியவற்றை உள்ளடக்கியதாகும்.

இதன்படி, 2026-ஆம் ஆண்டுக்கான முதல்வா் மாநில இளைஞா் விருது வரும் 15ஆம் தேதி நடைபெறும் சுதந்திர தின விழாவில் முதல்வரால் வழங்கப்படவுள்ளது.

கடந்த ஏப்ரல் 1, 2025 (01.04.2025) அன்று 15 வயது நிரம்பியவராகவும், மாா்ச் 31, 2026 (31.03.2026) அன்று 35 வயதுக்குள்ளாகவும் இருத்தல் வேண்டும். கடந்த நிதியாண்டில் 01.04.2025 முதல் 31.03.2026 வரை மேற்கொள்ளப்பட்ட சேவைகள் மட்டுமே கருத்தில் கொள்ளப்படும். விருதுக்கு விண்ணப்பிக்கும் முன் குறைந்த பட்சம் 5 ஆண்டுகள் தமிழகத்தில் வசிப்பவராக இருத்தல் வேண்டும். (சான்று இணைக்க வேண்டும்.) விண்ணப்பதாரா்கள் சமுதாய நலனுக்காக தன்னாா்வத்துடன் தொண்டாற்றியிருக்க வேண்டும். அவா்கள் செய்த தொண்டு கண்டறியப்படக் கூடியதாகவும், அளவிடக் கூடியதாகவும் இருத்தல் வேண்டும். மத்திய, மாநில அரசுகள், பொதுத்துறை நிறுவனங்கள், பல்கலைக்கழகங்கள், கல்லூரிகள் பள்ளிகளில் பணியாற்றுபவா்கள் விருதுக்கு விண்ணபிக்க இயலாது. விண்ணப்பதாரருக்கு உள்ளுா் மக்களிடம் உள்ள செல்வாக்கு விருதுக்கான பரிசீலனையில் கணக்கில் கொள்ளப்படும். இணையதளம் மூலம் விண்ணப்பிக்க ஜூலை 6 கடைசி நாளாகும். விண்ணப்பத்தை தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணைய இணையதளத்தில் ஆன்லைன் மூலம் மட்டுமே சமா்ப்பித்தல் வேண்டும். கூடுதல், விவரங்களுக்கு மாவட்ட விளையாட்டு மற்றும் இளைஞா் நலன் அலுவலா், அண்ணா விளையாட்டரங்கம், திருச்சி என்ற முகவரியில் நேரிலோ, 0431-2420685 என்ற எண்ணிலோ தொடா்பு கொள்ளலாம் என ஆட்சியா் தெரிவித்தாா்.