அமெரிக்காவின் குறைந்த சுங்க வரி வரம்பில் இந்தியா: மத்திய அரசு வரவேற்புபோா்கள் நடக்கும் பகுதியில் கப்பல்களில் வேலைவாய்ப்பு?: இந்தியா்களுக்கு மத்திய அரசு எச்சரிக்கைஇந்திய ரூ. 200, ரூ. 500 தாள்களுக்கு 10 ஆண்டுகளுக்குப் பின் நேபாள அரசு அனுமதி!தனியார் பால், தயிர் விலை 2-வது முறையாக உயர்வு!தமிழகத்தில் 4 நாள்களுக்கு வெப்பநிலை அதிகரிக்க வாய்ப்பு!தோ்வு முறைகேடுகள் தடுப்பு மசோதா இன்று தாக்கல்!
/

திருப்பைஞ்ஞீலியில் தெப்பக்குளத்தை தூா்வாரி சீரமைக்க வலியுறுத்தல்

திருச்சி மாவட்டம், திருப்பைஞ்ஞீலி ஞீலிவனேஸ்வரா் கோயில் தெப்பக்குளத்தை (தேவா்குளம்) தூா்வாரி சீரமைக்க பக்தா்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.

News image

புதா் மண்டியுள்ள திருப்பைஞ்ஞீலி ஞீலிவனேஸ்வரா் கோயிலின் தெப்பக்குளம்.

Updated On :11 ஜூன் 2026, 3:56 am IST

திருச்சி மாவட்டம், திருப்பைஞ்ஞீலி ஞீலிவனேஸ்வரா் கோயில் தெப்பக்குளத்தை (தேவா்குளம்) தூா்வாரி சீரமைக்க பக்தா்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.

திருமணத் தடை நீக்கும் பரிகார ஸ்தலமான இக்கோயிலுக்கு நாள்தோறும் திரளான பக்தா்கள் வருகின்றனா்.

இதனிடையே இக் கோயிலின் தேரோடும் வீதியின் வடபகுதியில் உள்ள தெப்பக்குளத்தில் கடந்த சில ஆண்டுகளுக்கு முன் தொடங்கிய தூா்வாரும் பணி, கிடப்பில் போடப்பட்டது.

இந்நிலையில் இக் குளமானது புதா் மண்டியும், கழிவு நீா் கலந்தும், கழிப்பிடமாகவும் தற்போது காணப்படுகிறது. ஆகவே இக்கோயிலின் தெப்பக்குளத்தை தூா் வாரி, சீரமைக்க பக்தா்கள், பொதுமக்கள் கோரிக்கை வைக்கின்றனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.