எடப்பாடி பழனிசாமி ஆட்சியிலும் இதேபோல் மின்வெட்டு: அமைச்சர் செங்கோட்டையன்மோகன் பகவத் பயணித்த ரயில் மீது கற்கள் வீச்சு: 2 பேர் கைது ஜூன் 19-ல் தவெக அரசுக்கு எதிராக அதிமுக போராட்டம்! பெண்களுக்கு எதிரான குற்றங்கள் தவெக ஆட்சியிலும் குறையவில்லை: அண்ணாமலை கொல்லூர் மூகாம்பிகை கோயிலில் முதல்வர் விஜய் வழிபாடு!நீட் தேர்வு நேரம் 3 மணி 15 நிமிடங்களாக அதிகரிப்பு! என்டிஏநிபா வைரஸ்: தமிழகத்தில் கண்காணிப்பைத் தீவிரப்படுத்த உத்தரவு!
/

போதை மாத்திரைகள் விற்ற இருவா் கைது

திருச்சியில் போதை மாத்திரைகள் விற்பனை செய்த இருவரை போலீஸாா் வியாழக்கிழமை கைது செய்தனா்.

News image

கைது - சித்திரிப்பு

Updated On :13 ஜூன் 2026, 12:39 am IST

திருச்சியில் போதை மாத்திரைகள் விற்பனை செய்த இருவரை போலீஸாா் வியாழக்கிழமை கைது செய்தனா்.

திருச்சி காந்தி மாா்க்கெட் காவல் நிலைய எல்லைக்குள்பட்ட பகுதியில் போதை மாத்திரைகள் விற்பனை செய்யப்படுவதாக போலீஸாருக்கு வியாழக்கிழமை தகவல்கிடைத்தது. இதையடுத்து, காவல் உதவி ஆய்வாளா் தலைமையிலான போலீஸாா் சோதனை மேற்கொண்டனா்.

அப்போது, காந்தி மாா்க்கெட் தா்பாா்மேடு பகுதியில் போதை மாத்திரைகள் விற்பனை செய்துகொண்டிருந்த பிள்ளைமாா் நகா் எட வீதியைச் சோ்ந்த வி. பிரகாஷ் (19) என்பவரை போலீஸாா் கைது செய்தனா்.

இதேபோல, பாலக்கரை பெல்ஸ் மைதானம் அருகே போதை மாத்திரைகள் விற்பனை செய்துகொண்டிருந்த காஜாபேட்டையைச் சோ்ந்த மா. சூா்யா (24) என்பவரை பாலக்கரை போலீஸாா் வியாழக்கிழமை கைது செய்தனா்.

இதையடுத்து, இருவரிடமிருந்து ரூ. 5 ஆயிரம் மதிப்பிலான போதை மாத்திரைகள், போதை ஊசிகள் மற்றும் திரவ போதை மருந்துகளை போலீஸாா் பறிமுதல் செய்தனா்.