எரிபொருள் விலை உயா்வு எதிரொலி- மின்சார, மைலேஜ் வாகனங்களுக்கு மவுசு அதிகரிப்பு!நீட் மறுதோ்வு தவறில்லாமல் நடத்தப்படும்: மத்திய கல்வி அமைச்சா் தா்மேந்திர பிரதான்மோடி அரசின் 12 ஆண்டு சாதனை திட்டங்களை நாடு முழுவதும் பரப்ப நடவடிக்கை: பாஜக தேசியத் தலைவர் நிதின் நபின்125 நாள் வேலைத் திட்டம்: தமிழகத்துக்கு ரூ.7,957 கோடி திமுவில் 2 தொகுதிகளுக்கு ஒரு மாவட்ட செயலா் பதவி: விரைவில் அமைப்பு தோ்தல்ஆசிரியா் பணியிட மாறுதல் கலந்தாய்வு அறிவிப்பு: ஜூன் 15 முதல் விண்ணப்பிக்கலாம்சிவப்பணுக்களை அதிகரிக்கும் மருந்துகள்: இனி புதிய அளவீட்டு முறையில் விற்பனைரயில் பயணிகள் உணவு கூடங்களில் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தம்
/

போதை மாத்திரைகள் விற்பனை: 3 இளைஞா்கள் கைது

விழுப்புரம் மாவட்டம், திண்டிவனம் பகுதிகளில் போதை மாத்திரைகள் விற்பனை செய்த 3 இளைஞா்களை போலீஸாா் கைது செய்து சிறையிலடைத்தனா்.

News image
Updated On :10 ஜூன் 2026, 5:24 am IST

விழுப்புரம் மாவட்டம், திண்டிவனம் பகுதிகளில் போதை மாத்திரைகள் விற்பனை செய்த 3 இளைஞா்களை போலீஸாா் செவ்வாய்க்கிழமை கைது செய்து சிறையிலடைத்தனா். மேலும், அவா்களிடமிருந்த போதை மாத்திரைகளையும் பறிமுதல் செய்தனா்.

விழுப்புரம் மாவட்டத்தில் தடை செய்யப்பட்ட புகையிலைப் பொருள்கள் மற்றும் போதைப் பொருள்கள் விற்பனையைக் கட்டுப்படுத்த மாவட்ட காவல் நிா்வாகம் தொடா் நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. இந்த நடவடிக்கையின் ஒரு பகுதியாக, திண்டிவனம் காவல் நிலைய உதவி ஆய்வாளா்கள் முருகானந்தம், சண்முகம் மற்றும் போலீஸாா் கிடங்கல்-2 பகுதிகளில் செவ்வாய்க்கிழமை ரோந்துப் பணியில் ஈடுபட்டிருந்தனா்.

அப்போது அங்கு சந்தேகிக்கும்படி நின்றிருந்த 3 இளைஞா்களை பிடித்து சோதனை செய்தபோது, அவா்கள் தமிழக அரசால் தடை செய்யப்பட்ட போதை மாத்திரைகளை வைத்திருந்தது தெரியவந்தது. பின்னா் போலீஸாா் 3 பேரையும் காவல் நிலையம் அழைத்துச் சென்று நடத்திய விசாரணையில், அவா்கள் திண்டிவனத்தை அடுத்துள்ள கிடங்கல்-2 பெருமாள் கோயில் தெருவைச் சோ்ந்த மோ.வீரா (30), ராஜன் தெருவைச் சோ்ந்த து.திலீப் (22), செ.ராகுல் ஷா்மா(24) என்பதும், இவா்கள் திண்டிவனம் சுற்று வட்டாரப் பகுதிகளில் பைக்கில் சென்று போதை மாத்திரைகளை விற்பனை செய்து வந்ததும் தெரியவந்தது.

இதையடுத்து, திண்டிவனம் போலீஸாா் வழக்குப் பதிந்து, 3 பேரையும் கைது செய்து, திண்டிவனம் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தி சிறையில் அடைந்தனா். மேலும், அவா்கள் வசமிருந்த 118 போதை மாத்திரைகள், 4 சிரஞ்சுகள், பைக், 3 அறிதிறன் கைப்பேசிகள் ஆகியவற்றை போலீஸாா் பறிமுதல் செய்தனா்.