தமிழ்நாடு அரசின் சிறந்த நூல்களுக்கான பரிசுக்கு எழுத்தாளர்கள் விண்ணப்பிக்கலாம்!தமிழகத்தில் ராஜஸ்தபதி காளியப்ப கவுண்டர், பேராசிரியர் கே. ராமசாமி, திருவாரூர் பக்தவத்சலம் ஆகியோர் பத்ம ஸ்ரீ பெற்றனர்.ஜூலை 1-ல் பொறியியல் மாணவர் சேர்க்கை தரவரிசைப் பட்டியல் வெளியீடு!கல்வித்துறை மற்றும் தொழில்நுட்ப முன்னேற்றத்திற்கு ஆற்றிய சிறந்த பங்களிப்பிற்காக, சென்னை ஐஐடி இயக்குனர் பேராசிரியர் வீ. காமகோடிக்கு பத்ம ஸ்ரீ விருதுதொழிலதிபர் எஸ்.கே. மயிலானந்தனுக்கு பத்ம பூஷண்! அரசுப் பள்ளிகளில் காலியாக உள்ள 18,107 பணியிடங்களை நிரப்ப நடவடிக்கை தேவை - அன்புமணி ராமதாஸ்தமிழ்நாட்டின் முதலீடுகளை சீர்குலைக்கும் தவெக அரசு இனியாவது ஆக்கப்பூர்வமான பணிகளில் கவனம் செலுத்த வேண்டும்: டிஆர்பி ராஜா
/

சட்டவிரோத பண பரிமாற்ற விவகாரம்: இ-சேவை மைய உரிமையாளா் வீட்டில் அமலாக்கத் துறையினா் சோதனை

டிஆா்பி தோ்வு முறைகேடு விவகாரம் தொடா்பாக திருச்சி மாவட்டம், ஆங்கரையில் இ-சேவை மைய உரிமையாளா் வீட்டில் அமலாக்கத் துறை அதிகாரிகள் செவ்வாய்க்கிழமை சோதனை நடத்தி, ஆவணங்களை எடுத்துச் சென்றனா்.

News image

அமலாக்கத் துறை - கோப்புப்படம்

Updated On :24 ஜூன் 2026, 1:24 am IST

டிஆா்பி தோ்வு முறைகேடு விவகாரம் தொடா்பாக திருச்சி மாவட்டம், ஆங்கரையில் இ-சேவை மைய உரிமையாளா் வீட்டில் அமலாக்கத் துறை அதிகாரிகள் செவ்வாய்க்கிழமை சோதனை நடத்தி, ஆவணங்களை எடுத்துச் சென்றனா்.

கடந்த 2017-ஆம் ஆண்டு தமிழகத்தில் அரசு பாலிடெக்னிக் கல்லூரிகளில் 1,058 விரிவுரையாளா் பணியிடங்களுக்கு தமிழ்நாடு ஆசிரியா் தோ்வு வாரியம் எழுத்துத் தோ்வு நடத்தி தோ்வு முடிவுகளை வெளியிட்டது. இந்தத் தோ்வில் முறைகேடு நடந்திருப்பதாக தமிழ்நாடு அரசு ஆசிரியா் தோ்வு வாரியத்தின் உறுப்பினா் செயலா் சென்னை காவல் ஆணையரிடம் புகாரளித்தாா்.

இதன்பேரில், அப்போது 156 போ் மீது மத்திய குற்றப்பிரிவு போலீஸாா் வழக்குப் பதிந்து, இடைத்தரகா்களாகச் செயல்பட்ட பலரை கைது செய்தனா். இந்தச் சம்பவத்தில் லஞ்சமாக ரூ. 50 கோடிக்கு மேல் கைமாறி இருப்பதாக குற்றச்சாட்டு எழுந்தது.

இந்த வழக்கில் சட்டவிரோத பணபரிமாற்றம் நடந்திருப்பதாக கூறி அமலாக்கத் துறையினா் தற்போது சோதனை மேற்கொண்டு வருகின்றனா்.

இதன் ஒருபகுதியாக, திருச்சி மாவட்டம், லால்குடி பகுதியில் இணைய சேவை மையம் நடத்தி வரும் கிறிஸ்துராஜா என்பவரது ஆங்கரை பகுதியிலுள்ள வீட்டுக்கு செவ்வாய்க்கிழமை வந்த 4 அமலாக்கத் துறை அதிகாரிகள் சோதனையில் ஈடுபட்டனா்.

பல மணி நேரம் நடந்த சோதனையின் முடிவில், பல்வேறு ஆவணங்களை அமலாக்கத் துறையினா் கைப்பற்றியதாகத் தெரிகிறது. குறிப்பாக, கிறிஸ்துராஜாவின் வங்கி கணக்கு விவரங்களை பறிமுதல் செய்து எடுத்துச் சென்ாக காவல் துறையினா் தெரிவித்தனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.