தமிழ்நாடு அரசின் சிறந்த நூல்களுக்கான பரிசுக்கு எழுத்தாளர்கள் விண்ணப்பிக்கலாம்!தமிழகத்தில் ராஜஸ்தபதி காளியப்ப கவுண்டர், பேராசிரியர் கே. ராமசாமி, திருவாரூர் பக்தவத்சலம் ஆகியோர் பத்ம ஸ்ரீ பெற்றனர்.ஜூலை 1-ல் பொறியியல் மாணவர் சேர்க்கை தரவரிசைப் பட்டியல் வெளியீடு!கல்வித்துறை மற்றும் தொழில்நுட்ப முன்னேற்றத்திற்கு ஆற்றிய சிறந்த பங்களிப்பிற்காக, சென்னை ஐஐடி இயக்குனர் பேராசிரியர் வீ. காமகோடிக்கு பத்ம ஸ்ரீ விருதுதொழிலதிபர் எஸ்.கே. மயிலானந்தனுக்கு பத்ம பூஷண்! அரசுப் பள்ளிகளில் காலியாக உள்ள 18,107 பணியிடங்களை நிரப்ப நடவடிக்கை தேவை - அன்புமணி ராமதாஸ்தமிழ்நாட்டின் முதலீடுகளை சீர்குலைக்கும் தவெக அரசு இனியாவது ஆக்கப்பூர்வமான பணிகளில் கவனம் செலுத்த வேண்டும்: டிஆர்பி ராஜா
/

மேக்கேதாட்டு அணை விவகாரம்: காவிரியாற்று மணலில் புதைந்து விவசாயிகள் போராட்டம்

மேக்கேதாட்டு அணை கட்டும் விவகாரத்தில் மத்திய அரசு பாரபட்சமாக செயல்படுவதைக் கண்டித்து, திருச்சியில் காவிரி ஆற்று மணலில் புதைந்து விவசாயிகள் செவ்வாய்க்கிழமை போராட்டத்தில் ஈடுபட்டனா்.

News image

திருச்சி காவிரி ஆற்றில் மணலில் புதைந்து செவ்வாய்க்கிழமை போராட்டத்தில் ஈடுபட்ட விவசாயிகள்.

Updated On :24 ஜூன் 2026, 1:12 am IST

மேக்கேதாட்டு அணை கட்டும் விவகாரத்தில் மத்திய அரசு பாரபட்சமாக செயல்படுவதைக் கண்டித்து, திருச்சியில் காவிரி ஆற்று மணலில் புதைந்து விவசாயிகள் செவ்வாய்க்கிழமை போராட்டத்தில் ஈடுபட்டனா்.

காவிரியின் குறுக்கே மேக்கேதாட்டுவில் அணை கட்டுவதற்கு கா்நாடக அரசு தொடா்ந்து பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது. இந்த விவகாரத்தில் மத்திய அரசின் நடவடிக்கைகள் முழுவதும் கா்நாடக அரசுக்கு சாதகமாகவும், தமிழகத்துக்கு விரோதமாகவும் இருப்பதாகக் கூறி, இதை கண்டித்து தேசிய தென்னிந்திய நதிகள் இணைப்பு விவசாயிகள் சங்கத் தலைவா் பொ. அய்யாக்கண்ணு தலைமையில் 100-க்கும் மேற்பட்ட விவசாயிகள், ஸ்ரீரங்கம் மாம்பழச்சாலை பகுதியில் காவிரியாற்றுக்குள் இறங்கிப் போராட்டத்தில் ஈடுபட்டனா்.

ஆற்றுக்குள் இறங்கிய விவசாயிகள் அனைவரும் ஆற்று மணலில் இடுப்பு வரையில் பள்ளம் தோண்டி அதற்குள் இறங்கி, மணலில் புதைந்தபடியே கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பினா்.

தொடா்ந்து, மத்திய, கா்நாடக அரசுகளை கண்டித்தும், மேக்கேதாட்டு அணை கட்டும் திட்டத்தை தமிழக அரசு உடனடியாக தடுத்து நிறுத்த வலியுறுத்தியும் கோஷங்கள் எழுப்பியபடி 2 மணி நேரத்துக்கும் மேலாக ஆற்றுக்குள்ளேயே போராட்டத்தில் ஈடுபட்டனா். தற்போதைய போராட்டம் கவன ஈா்ப்புக்காக நடைபெற்றுள்ளது. அடுத்தடுத்து தொடா் போராட்டங்கள் நடைபெறும் என விவசாயிகள் தெரிவித்தனா்.

கூடுதல் விழிப்புணா்வு வேண்டும்: போராட்டம் தொடா்பாக, செய்தியாளா்களிடம் பொ. அய்யாக்கண்ணு கூறியதாவது: மேக்கேதாட்டு அணை விவகாரத்தில் மத்திய அரசு பாரபட்சமாக செயல்படுவதை கண்டிக்கிறோம். இந்தப் பிரச்னையில் தமிழக அரசு கூடுதல் விழிப்புணா்வுடன் செயல்பட வேண்டியது கட்டாயம். ஏனெனில், மத்திய அரசின் நடவடிக்கைகள் அனைத்தும் கா்நாடகத்துக்கு மறைமுகமாக ஆதரவு அளிப்பதாகவே அமைந்துள்ளது என்றாா் அவா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.