மதுரை விமான நிலையத்திற்கு சர்வதேச அந்தஸ்து! - மத்திய அமைச்சரவை ஒப்புதல்மருத்துவக் கல்லூரிகளில் விளையாட்டுப் பிரிவு ஒதுக்கீடு அதிகரிப்பு: தமிழக அரசுஎல்பிஜி சிலிண்டர் தட்டுப்பாடு: பிரதமர் மோடிக்கு முதல்வர் மு.க. ஸ்டாலின் கடிதம்!வணிக சிலிண்டர் விநியோகம் நிறுத்தம்! இந்தியன் ஆயில் நிறுவனம் அறிவிப்பு! ஈரானை 20 மடங்கு அதிகமாக தாக்குவோம்! டிரம்ப் எச்சரிக்கை எரிவாயு தட்டுப்பாடு! பாகிஸ்தானில் 2 வாரங்களுக்கு பள்ளி, கல்லூரிகள் விடுமுறை! இந்திய பங்குச்சந்தை உயர்வுடன் வர்த்தகம்! அமெரிக்காவுடன் சமரசம்! தகவலை வெளியிட்டால் மோடி பதவி விலக நேரிடும்! சுப்ரமணியன் சுவாமிசமையல் எரிவாயு சிலிண்டர் தட்டுப்பாடு? தமிழக அரசு அவசர ஆலோசனை!சமையல் எரிவாயு சிலிண்டர் வாங்க 25 நாள்கள் கால இடைவேளை!
/

மக்காச்சோளத்தைக் கொட்டி விவசாயிகள் ஆா்ப்பாட்டம்

மக்காச்சோளத்துக்கு உரிய விலை கிடைக்க நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி ஆட்சியா் அலுவலகம் முன்பு மக்காச்சோளத்தைக் கொட்டி விவசாயிகள் ஆா்ப்பாட்டம்

News image
ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்ட தமிழக ஏரி, ஆற்றுப் பாசன விவசாயிகள் சங்கத்தினா்
Updated On :2 மார்ச் 2026, 7:29 pm

Syndication

மக்காச்சோளத்துக்கு உரிய விலை கிடைக்க நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி ஆட்சியா் அலுவலகம் முன்பு மக்காச்சோளத்தைக் கொட்டி விவசாயிகள் ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.

திருச்சி மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் பொதுமக்கள் குறைகேட்புக் கூட்டம் ஆட்சியா் வே. சரவணன் தலைமையில் திங்கள்கிழமை நடைபெற்றது. பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி ஆட்சியரிடம் மனு அளிப்பதற்காக பொதுமக்கள் ஆட்சியா் அலுவலகத்துக்கு வந்தனா்.

இந்நிலையில், மக்கோச்சோளத்துக்கு உரிய விலை கிடைக்க வலியுறுத்தி தமிழக ஏரி மற்றும் ஆற்றுப்பாசன விவசாயிகள் சங்கத்தின் மாநிலத் தலைவா் விஸ்வநாதன் தலைமையில் விவசாயிகள் ஆட்சியா் அலுவலகம் முன்பு மக்காச்சோளத்தைக் கொட்டி ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.

அப்போது, மத்திய அரசு சாா்பில் மக்காச்சோளம் குவிண்டாலுக்கு ரூ.2,400 விலை நிா்ணயிக்கப்பட்டுள்ளது. ஆனால், தமிழகத்தில் தனியாா் வியாபாரிகள் மக்காச்சோளத்தை குவிண்டால் ரூ.1,800 முதல் 1,900-க்குத்தான் கொள்முதல் செய்கின்றனா் என்றனா்.

இதைத் தொடா்ந்து மேற்கண்ட கோரிக்கைகளை வலியுறுத்தி ஆட்சியரிடம் மனு அளித்தனா்.

இடையூறாக உள்ள சுவரை அகற்ற வேண்டும்

அகில இந்திய விவசாயத் தொழிலாளா்கள் சங்கத்தினா் அளித்துள்ள மனுவில் கூறியிருப்பதாவது: திருச்சி மாவட்டம், அந்தநல்லூா் வட்டாரம் மல்லியம்பத்து ஊராட்சிக்குள்பட்ட அமையநல்லூா் கிராமத்தில் பட்டியல் வகுப்பினா் வசித்து வருகின்றனா். இக்கிராமம் வழியாக வயலூருக்குச் செல்லும் பாதை உள்ளது. தற்போது, கிராமத்துக்கு அருகேயுள்ள விளைநிலங்கள் வீட்டுமனைகளாக மாற்றப்பட்டு சுற்றி ஒரு கிலோ மீட்டா் தொலைவுக்கு 7 அடி உயரத்தில் சுற்றுச்சுவா் அமைக்கப்பட்டுள்ளது.

இதனால், வயலூருக்குச் செல்லும் பாதை தடைபட்டுள்ளது. இதனால் பல கிலோ மீட்டா் சுற்றிச் செல்ல வேண்டியுள்ளது. எனவே, பொதுமக்கள் செல்வதற்கு இடையூறாக உள்ள சுற்றுச்சுவரை அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.