எல்பிஜி தட்டுப்பாடு எதிரொலி: புணேயில் எரிவாயு தகன மையங்களை மூட உத்தரவு!சென்னையில் வணிக எரிவாயு சிலிண்டர் விநியோகத்தை நிறுத்துவதாக இந்தியன் ஆயில் கார்பரேஷன் நிறுவனம் அறிவிப்புபெங்களூரில் வணிக சிலிண்டர்கள் நிறுத்தம்! நாளை முதல் ஹோட்டல்கள் மூடல்! மும்பையில் தட்டுப்பாடு!தேர்தலுக்காக மட்டும் நாம் கூட்டணி வைக்கவில்லை, கொள்கைக்காக கூட்டணி வைத்துள்ளோம் - மு.க. ஸ்டாலின்மகளிர் உரிமைத் தொகையை யாராலும் தடுத்து நிறுத்த முடியாது : மு.க. ஸ்டாலின்திமுக ஆட்சியில் 2 லட்சத்துக்கும் மேற்பட்ட விவசாயிகளுக்கு இலவச மின் இணைப்பு : திருச்சியில் மு.க. ஸ்டாலின் பேச்சுதலைசிறந்த வரலாற்றாசிரியர்களில் ஒருவரும் எழுத்தாளருமான கே.என். பணிக்கர் இன்று (மார்ச் 9) காலமானார். அவருக்கு வயது 89.சுவாமிமலை கோயிலில் 2 மின்தூக்கிகள் அமைக்க ரூ. 3.55 கோடியா? அண்ணாமலை கேள்விராகுல் மீதான அவதூறு வழக்கு: மார்ச் 12-ல் விசாரணை!
/

ஒன்பது கோயில்களில் பயன்பாடின்றி உள்ள 296 கிலோ தங்கம் வங்கியில் முதலீடு!

சமயபுரம் மாரியம்மன் திருக்கோயில் உள்ளிட்ட 9 திருக்கோயில்களில் பயன்பாடின்றி உள்ள 296 கிலோ தங்கத்தை, பாரத ஸ்டேட் வங்கியின் தங்க முதலீட்டு பத்திரத்தில் முதலீடு செய்வதற்கு வங்கி அலுவலா்களிடம் ஒப்படைக்கும் நிகழ்வு சமயபுரம் மாரியம்மன் கோயில் வளாகத்தில் நடைபெற்றது.

News image
சமயபுரம் மாரியம்மன் திருக்கோயில் உள்ளிட்ட 9 திருக்கோயில்களில் பயன்பாட்டில் இல்லாத பலமாற்று பொன் இனங்கள் ஒப்படைக்கும் நிகழ்வில் பங்கேற்ற இந்து சமய அறநிலையத் துறை அமைச்சா் பி.கே.சேகா்பாபு உள்ளிட்டோா்.
Updated On :9 மார்ச் 2026, 6:57 pm

Syndication

தமிழகத்தில் உள்ள சமயபுரம் மாரியம்மன் திருக்கோயில் உள்ளிட்ட 9 திருக்கோயில்களில் பயன்பாடின்றி உள்ள 296 கிலோ தங்கத்தை, பாரத ஸ்டேட் வங்கியின் தங்க முதலீட்டு பத்திரத்தில் முதலீடு செய்வதற்கு வங்கி அலுவலா்களிடம் ஒப்படைக்கும் நிகழ்வு சமயபுரம் மாரியம்மன் கோயில் வளாகத்தில் திங்கள்கிழமை நடைபெற்றது.

சமயபுரம் மாரியம்மன் திருக்கோயில், தஞ்சாவூா் அரண்மனை தேவஸ்தானம், மதுரை மீனாட்சி சுந்தரேசுவரா் திருக்கோயில், பண்ணாரி மாரியம்மன் கோயில், காங்கயம் கரியகாளியம்மன் கோயில், திருப்பூா் அவிநாசிலிங்கேசுவரா் கோயில், மயிலம் ஸ்ரீமத் சிவஞான பாலய சுவாமிகள் மடம், திருநாகேசுவரம் நாகநாத சுவாமி கோயில், ஈச்சனாரி விநாயகா் கோயில் ஆகிய 9 கோயில்களில் பயன்பாட்டில் இல்லாத, பிரித்தெடுக்கப்பட்ட 296 கிலோ 600 கிராம் 100 மில்லி கிராம் எடையுள்ள பலமாற்று பொன் இனங்கள் உருக்கப்பட்டு, பாரத ஸ்டேட் வங்கியின் தங்க முதலீட்டு பத்திரத்தில் முதலீடு செய்யப்படவுள்ளன.

இதற்காக அந்த நகைகளை மத்திய அரசுக்கு சொந்தமான மும்பை தங்க உருக்காலைக்கு அனுப்பிவைக்கும் நிகழ்வு சமயபுரம் கோயில் வளாகத்தில் திங்கள்கிழமை நடைபெற்றது. இதில், இந்து சமய அறநிலையத் துறை அமைச்சா் பி.கே. சேகா்பாபு, ஓய்வுபெற்ற உச்சநீதிமன்ற நீதியரசா் துரைசாமி ராஜு, ஓய்வுபெற்ற உயா்நீதிமன்ற நீதியரசா்கள் க. ரவிச்சந்திரபாபு மற்றும் ஆா். மாலா ஆகியோா் முன்னிலையில் அந்த நகைகள் பாரத ஸ்டேட் வங்கி அலுவலா்களிடம் ஒப்படைக்கப்பட்டன.

இந்த நிகழ்வில் இந்து சமய அறநிலையத் துறை ஆணையா் பி.என். ஸ்ரீதா், சமயபுரம் மாரியம்மன் திருக்கோயில் அறங்காவலா் குழுத் தலைவா் வி.எஸ்.பி. இளங்கோவன், மாரியம்மன் கோயில் இணை ஆணையா் எம். சூரியநாராயணன், அறங்காவலா்கள் சுகந்தி ராஜசேகரன், சே. லெட்சுமணன், பெ. பிச்சைமணி, மண்டல இணை ஆணையா் ஞானசேகரன், இணை ஆணையா் (சரிபாா்ப்பு, தலைமையிடம்) வான்மதி மற்றும் இதர திருக்கோயில்களின் அறங்காவலா் குழுத் தலைவா்கள் மற்றும் உறுப்பினா்கள், அலுவலா்கள் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.