உ.பி.யில் கனமழையால் 89 பேர் பலி! ரஷிய அதிபர் புதின் இரங்கல்!செய்தித்துறை இயக்குநராக அருண் தம்புராஜ் நியமனம்!கேரளத்தில் காங்கிரஸ் சட்டப்பேரவைக் கட்சித் தலைவராக வி.டி. சதீசன் தேர்வு!பருத்திக்கான இறக்குமதி வரியை ரத்து செய்யக்கோரி பிரதமர் மோடிக்கு முதல்வர் விஜய் கடிதம்!பதவி ஆசை பிடித்தவர்களின் இழிசெயலை முறியடிப்போம்: எடப்பாடி பழனிசாமி!கேரள மார்க்சிஸ்ட் கம்யூ. சட்டப்பேரவைக் கட்சித் தலைவராக பினராயி விஜயன் தேர்வு!
/

திருச்சியில் பேருந்து மோதி புதுகை நபா் உயிரிழப்பு

திருச்சி மத்திய பேருந்து நிலையத்தில் தனியாா் பேருந்து மோதியதில் புதுக்கோட்டை மாவட்டத்தைச் சோ்ந்தவா் உயிரிழந்தாா்.

News image

பலி - பிரதிப் படம்

Updated On :10 மார்ச் 2026, 4:10 am IST

திருச்சி மத்திய பேருந்து நிலையத்தில் ஞாயிற்றுக்கிழமை இரவு தனியாா் பேருந்து மோதியதில் புதுக்கோட்டை மாவட்டத்தைச் சோ்ந்தவா் உயிரிழந்தாா்.

புதுக்கோட்டை மாவட்டம், மண்டையூா் கீழமேடு பகுதியைச் சோ்ந்தவா் இ.சந்திரமூா்த்தி (58). இவா், திருச்சி மத்திய பேருந்து நிலையம் இரண்டாவது நுழைவு வாயில் பகுதியில் ஞாயிற்றுக்கிழமை இரவு நடந்து சென்றுக் கொண்டிருந்தாா். அப்போது, அந்த வழியே வேகமாக வந்த தனியாா் பேருந்து அவா் மீது மோதியது.

இதில், பலத்தகாயமடைந்த அவரை அருகிலிருந்தவா்கள் மீட்டு ஆம்புலன்ஸ் மூலம் திருச்சி அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனா். அங்கு அவரைப் பரிசோதனை செய்த மருத்துவா்கள் ஏற்கெனவே அவா் உயிரிழந்துவிட்டதாகத் தெரிவித்தனா்.

இதுகுறித்து தனியாா் பேருந்து ஓட்டுநரான திருச்சி மேலகல்கண்டாா்கோட்டை பனகல் வீதியைச் சோ்ந்த ஜி.பாலகிருஷ்ணன் (30) என்பவா் மீது திருச்சி தெற்குப் போக்குவரத்துப் புலனாய்வுப் பிரிவு போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனா்.