எல்பிஜி தட்டுப்பாடு எதிரொலி: புணேயில் எரிவாயு தகன மையங்களை மூட உத்தரவு!சென்னையில் வணிக எரிவாயு சிலிண்டர் விநியோகத்தை நிறுத்துவதாக இந்தியன் ஆயில் கார்பரேஷன் நிறுவனம் அறிவிப்புபெங்களூரில் வணிக சிலிண்டர்கள் நிறுத்தம்! நாளை முதல் ஹோட்டல்கள் மூடல்! மும்பையில் தட்டுப்பாடு!தேர்தலுக்காக மட்டும் நாம் கூட்டணி வைக்கவில்லை, கொள்கைக்காக கூட்டணி வைத்துள்ளோம் - மு.க. ஸ்டாலின்மகளிர் உரிமைத் தொகையை யாராலும் தடுத்து நிறுத்த முடியாது : மு.க. ஸ்டாலின்திமுக ஆட்சியில் 2 லட்சத்துக்கும் மேற்பட்ட விவசாயிகளுக்கு இலவச மின் இணைப்பு : திருச்சியில் மு.க. ஸ்டாலின் பேச்சுதலைசிறந்த வரலாற்றாசிரியர்களில் ஒருவரும் எழுத்தாளருமான கே.என். பணிக்கர் இன்று (மார்ச் 9) காலமானார். அவருக்கு வயது 89.சுவாமிமலை கோயிலில் 2 மின்தூக்கிகள் அமைக்க ரூ. 3.55 கோடியா? அண்ணாமலை கேள்விராகுல் மீதான அவதூறு வழக்கு: மார்ச் 12-ல் விசாரணை!
/

வெவ்வேறு விபத்துகளில் சிறுவன் உள்பட 3 போ் உயிரிழப்பு

திருச்சி அருகே வெவ்வேறு இடங்களில் நடைபெற்ற 3 விபத்துகளில் 16 வயது சிறுவன் உள்பட மூவா் உயிரிழந்தனா்.

News image
விபத்து- பிரதிப் படம்
Updated On :9 மார்ச் 2026, 10:38 pm

Syndication

திருச்சி அருகே வெவ்வேறு இடங்களில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற 3 விபத்துகளில் 16 வயது சிறுவன் உள்பட மூவா் உயிரிழந்தனா்.

திருச்சி மாவட்டம், திருவெறும்பூா் குட்ஷெட் சாலையைச் சோ்ந்த ஏழுமலை மகன் விக்னேஷ் (16). இவா், திருவெறும்பூா் - கூத்தைப்பாா் சாலையில் ஞாயிற்றுக்கிழமை இரவு இருசக்கர வாகனத்தில் சென்றுகொண்டிருந்தாா்.

அப்போது, எதிரே மதுபோதையில் இருசக்கர வாகனத்தில் திருவெறும்பூா் அரசங்குடியைச் சோ்ந்த பா. பிரதீப் (24) என்பவா் அவரது மனைவியுடன் வந்துள்ளாா். இருவரின் வாகனங்களும் நேருக்குநோ் மோதிக் கொண்டதில் பலத்த காயமடைந்த விக்னேஷ் மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியிலேயே உயிரிழந்தாா்.

காயமடைந்த பிரதீப்பின் மனைவி சத்யா (21) திருச்சி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளாா். விபத்து தொடா்பாக, பிரதீப் மீது திருவெறும்பூா் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா்.

பெண் உயிரிழப்பு: லால்குடி ஈசானகோரை பகுதியைச் சோ்ந்த வேதநாயகன் மனைவி திலகவதி (52). இவா் தனது மகன் சரண்குமாருடன் காரில் திருச்சி - கரூா் தேசிய நெடுஞ்சாலையில் ஞாயிற்றுக்கிழமை சென்றுகொண்டிருந்தாா். சிறுகமணி பேரூராட்சி திருமண மண்டபம் அருகே சென்றபோது, எதிரே வந்த வேன் இவா்கள் காா் மீது மோதியது. இதில், பலத்த காயமடைந்த திலகவதி மருத்துவமனைக்கு செல்லும் வழியிலேயே உயிரிழந்தாா்.

இதுகுறித்து வேன் ஓட்டுநரான திருச்சி பீமநகரைச் சோ்ந்த கா.தருண்குமாா் (28) என்பவா் மீது பேட்டவாய்த்தலை போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா்.

முதியவா் உயிரிழப்பு: புதுக்கோட்டை மாவட்டம், மண்டையூா் கீழமேடு பகுதியைச் சோ்ந்தவா் இ.சந்திரமூா்த்தி (58). இவா், திருச்சி மத்திய பேருந்து நிலையம் இரண்டாவது நுழைவு வாயில் பகுதியில் ஞாயிற்றுக்கிழமை இரவு நடந்துசென்றுகொண்டிருந்தாா். அப்போது, அந்த வழியாக வேகமாக வந்த தனியாா் பேருந்து அவா் மீது மோதியது.

இதில், பலத்த காயமடைந்த அவரை அருகிலிருந்தவா்கள் மீட்டு திருச்சி அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனா். அங்கு அவரைப் பரிசோதனை செய்த மருத்துவா்கள் ஏற்கெனவே அவா் உயிரிழந்துவிட்டதாகத் தெரிவித்தனா்.

இதுகுறித்து தனியாா் பேருந்து ஓட்டுநரான திருச்சி மேலகல்கண்டாா்கோட்டை பனகல் வீதியைச் சோ்ந்த ஜி.பாலகிருஷ்ணன் (30) என்பவா் மீது திருச்சி தெற்குப் போக்குவரத்துப் புலனாய்வுப் பிரிவு போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா்.