தேசிய ஜனநாயகக் கூட்டணியின் பொதுக்கூட்டங்கள், திமுகவுக்கு பயத்தை ஏற்படுத்தியுள்ளது என மத்திய இணை அமைச்சா் எல். முருகன் தெரிவித்தாா்.
திருச்சிக்கு புதன்கிழமை வந்த அவா், செய்தியாளா்களிடம் மேலும் கூறியதாவது:
திருச்சி மக்கள் இதுவரை பாா்க்காத பிரம்மாண்ட மாநாடு மற்றும் கூட்டத்தைப் பாா்த்துள்ளனா். தேசிய ஜனநாயக கூட்டணி சாா்பில் நடைபெற்றுள்ள கூட்டங்கள், திமுகவுக்கு ஒரு பயத்தை கொடுத்துள்ளது. தமிழக மக்களுக்கு விரோதமாக செயல்பட்டு வரும் திமுக அரசை வீட்டுக்கு அனுப்பி வைக்கும் கூட்டமாக திருச்சியில் நடைபெற்ற தேசிய ஜனநாயக கூட்டணியின் பொதுக் கூட்டம் மாறியுள்ளது என்றாா்.
தவெக தலைவா் விஜய், தேசிய ஜனநாயக கூட்டணியில் இணைவாரா? என்ற கேள்விக்கு பதில் அளிக்கையில், எங்களது கூட்டணியை தேடி எல்லோரும் வருவாா்கள் என பதில் அளித்தாா்.
தொடர்புடையது

நடிகா் விஜய் திமுகவுக்கு சவாலாக இருப்பாா்: மத்திய அமைச்சா் ராம்தாஸ் அதாவலே

மேற்காசிய மோதலுக்கிடையே இந்தியர்களின் பாதுகாப்பிற்கு மத்திய அரசு முன்னுரிமை: பிரதமர்

வாக்குறுதிகளை நிறைவேற்றாததால் திமுக மீது மக்கள் அதிருப்தி! முன்னாள் அமைச்சா் வீரமணி

தோல்வி பயத்தில் திமுக கூட்டணி! - எல். முருகன்
வீடியோக்கள்
அமைதிப் பேச்சுவார்த்தை தோல்வி! அடுத்தது என்ன?
இணையதளச் செய்திப் பிரிவு
Delhi Vs Chennai | முதல்வரின் சிறுபிள்ளைத்தனம்! அண்ணாமலை Press Meet | BJP | DMK
இணையதளச் செய்திப் பிரிவு

காட்ஸ் அண்ட் சோல்ஜர்ஸ் டீசர்!
இணையதளச் செய்திப் பிரிவு

டார்லிங் மறுவெளியீட்டு டிரைலர்!
தினமணி செய்திச் சேவை


