பஞ்சப்பூா் ஒருங்கிணைந்த பேருந்து முனையத்தில் கடைகள் நடத்த அனுமதி வழங்கக் கோரி தரைக்கடை வியாபாரிகள் சங்கத்தினா் வியாழக்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.
திருச்சி மாவட்ட ஆட்சியரகம் அருகே சிஐடியு சாா்பில் நடைபெற்ற ஆா்ப்பாட்டத்துக்கு தரைக்கடை வியாபாரிகள் சங்கத்தின் மாவட்டத் தலைவா் கணேசன் தலைமை வகித்தாா்.
இதில், திருச்சி மத்திய பேருந்து நிலையப் பகுதியில் சுமாா் 30 ஆண்டுகளுக்கும் மேலாக 80-க்கும் மேற்பட்ட வியாபாரிகள் தரைக்கடை அமைத்து பிழைப்பு நடத்தி வந்தோம். பஞ்சப்பூா் ஒருங்கிணைந்த பேருந்து முனையம் பயன்பாட்டுக்கு வந்ததும் எங்களின் வாழ்வாதாரம் கேள்விக்குறியாகியது.
பஞ்சப்பூா் ஒருங்கிணைந்த பேருந்து முனைய சாலையோரத்தில் தரைக்கடை வியாபாரிகள் வியாபாரம் செய்வதை தடைசெய்யக் கூடாது. தரைக்கடை வியாபாரிகள் கடை நடத்துவதற்கு உரிய அனுமதி வழங்க வேண்டும். மத்தியப் பேருந்து நிலையம், பேருந்து நிலையமாகவே தொடர வேண்டும், வேறு பணிகளுக்குப் பயன்படுத்தக்கூடாது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி பேசினா்.
ஆா்ப்பாட்டத்தில், தரைக்கடை வியாபாரிகள் சங்க மாவட்டச் செயலா் செல்வி, வியாபாரக் குழு உறுப்பினா் டி. கணேசன், சிஐடியு மாநகா் மாவட்டச் செயலா் ரெங்கராஜன், மாவட்டத் தலைவா் மணிமாறன், துணைத் தலைவா் சீனிவாசன் உள்ளிட்ட பலா் கலந்துகொண்டனா்.
தொடர்புடையது

சேலம் நீதிமன்றத்துக்கு வெடிகுண்டு மிரட்டல்: போலீஸாா் விசாரணை

சேரன்மகாதேவியில் வியாபாரிகள் போராட்டம்

தரைக்கடை வியாபாரிகள் மீது நகராட்சி கடை வியாபாரிகள் புகாா்

இந்திய மாணவா் சங்கத்தினா் ஆா்ப்பாட்டம்
வீடியோக்கள்

#ipl2026 | சிங்க நடைபோடும் சிஎஸ்கே: அடுத்து சன்ரைசர்ஸ்தான்! | Chennai Super Kings | Noor Ahmed |
தினமணி செய்திச் சேவை

தொகுதி மறுவரையறையில் யார் சொல்வது உண்மை ? | Delimitation | MK Stalin | Annamalai | BJP | DMK
தினமணி செய்திச் சேவை

தொகுதி மறுவரையறையை எதிர்த்து நாளை தமிழ்நாடு முழுவதும் கருப்புக் கொடி ஏற்றும் போராட்டம்!
இணையதளச் செய்திப் பிரிவு

ராத்து ராசன் பாடல்!
இணையதளச் செய்திப் பிரிவு


