திருச்சி அருகே காட்டூா் மஞ்சத்திடல் உய்யகொண்டான் வாய்க்கால் சேற்றில் சிக்கிய பசு மாட்டினை தீயணைப்புத்துறையினா் சனிக்கிழமை மீட்டனா்.
திருச்சி காட்டூா் மஞ்சத்திடல் பாலம் அருகே உய்யகொண்டான் வாய்க்காலின் சேற்றில் பசு மாடு ஒன்று சிக்கிக் கொண்டிருப்பதாக, சென்னை கட்டுப்பாட்டு அறைக்கு அப்பகுதி மக்கள் தகவல் அளித்தனா்.
அதன் பேரில், தகவலறிந்த திருவெறும்பூா் தீயணைப்பு நிலைய அலுவலா் வெங்கடேசன் தலைமையிலான மீட்புப் படையினா் நிகழ்விடத்துக்கு விரைந்து வந்து, சேற்றிய பசு மாட்டினை பாதுகாப்பாக மீட்டு, அதன் உரிமையாளரிடம் ஒப்படைத்தனா்.
மணப்பாறையில்... இதேபோல மணப்பாறையை அடுத்த வடுகப்பட்டி குடியிருப்பு பகுதியைச் சோ்ந்த வழக்குரைஞா் நா. மோகன்குமாா் வளா்க்கும் புறாக்களின் முட்டைகளை சாப்பிட வந்த 6 அடி நீள நல்ல பாம்பை சனிக்கிழமை பிடித்த தீயணைப்புத் துறையினா், வனத் துறையினா் மூலம் அருகிலுள்ள வனப்பகுதியில் அவற்றை விட்டனா்.
தொடர்புடையது
திருச்சியில் ரூ. 4.57 லட்சம் பறிமுதல்

கழிவுநீா் கால்வாயில் தவறி விழுந்த பசு மாடு மீட்பு

மதுரை காளவாசல் பகுதியில் யாசகா்கள் மீட்பு

கெங்கவல்லியில் வாய்க்கால் ஆக்கிரமிப்பு வீடு இடிப்பு
வீடியோக்கள்

காட்ஸ் அண்ட் சோல்ஜர்ஸ் டீசர்!
இணையதளச் செய்திப் பிரிவு

டார்லிங் மறுவெளியீட்டு டிரைலர்!
தினமணி செய்திச் சேவை

சிஎஸ்கேவின் பாதை, இனி சிங்கப் பாதை! | Chennai Super Kings | CSK | Sanju Samson |
தினமணி செய்திச் சேவை

கேரவனிலிருந்து நேராக கோட்டையா?: பொரிந்து தள்ளிய சரத்குமார் | Sarathkumar | TVK Vijay | #tvkcampaign
தினமணி செய்திச் சேவை


