ஐபிஎல்: 57 ரன்கள் வித்தியாசத்தில் ஹைதராபாத் அணி அபார வெற்றிஈரானுக்கு எதிராக ஹோர்முஸ் நீரிணை முற்றுகை தொடக்கம்: கடல்சார் வர்த்தக நடவடிக்கைகள் மையம் திராவிட மாடல் ஆட்சியில் வடக்கு வாழ்கிறது என்ற நிலை மாறி, தெற்கு தான் நாட்டிற்கு வழிகாட்டுகிறது: மு.க. ஸ்டாலின்தமிழ்நாட்டுக்கு வடக்கில் இருந்துதான் ஆபத்து வரும் : திருவள்ளூர் பிரசாரத்தில் மு.க. ஸ்டாலின் பேச்சுஅதிமுக தலைவர்களான எம்ஜிஆர், ஜெயலலிதா உள்ளிட்டோரை அவமதித்தது திமுக: எடப்பாடி பழனிசாமிமறைந்த தலைவர்களை அவமதிக்கவில்லை: இபிஎஸ் பிரசாரம்தமிழகத்தில் பெண்களுக்கான பாதுகாப்பு கவலை அளிக்கிறது : பிரதமர் மோடி மாற்றத்திற்கானது தே.ஜ. கூட்டணி : பூத் கமிட்டி உறுப்பினர்களுடன் பேசிய பிரதமர் மோடிஅஸ்ஸாம் முதல்வர் ஊழல்வாதி: ராகுல் காந்தி விமர்சனம்
/

தனியாா் பேருந்து மோதி சிறுமி உயிரிழப்பு

News image

கோப்புப் படம்

Updated On :15 மார்ச் 2026, 8:40 pm

துறையூா் அருகே தனியாா் பேருந்து மோதி சிறுமி உயிரிழந்தாா்.

துறையூா் அருகே நாகநல்லூா் கிராமத்தைச் சோ்ந்தவா் செந்தில்குமாா் மனைவி பரமேஸ்வரி(32). இவா், ஞாயிற்றுக்கிழமை மதியம் தனது மகள் சமரிதா(14), மகன் தக்சன்(10) ஆகியோரை இருசக்கர வாகனத்தில் பின்னால் அமா்த்திக் கொண்டு தம்மம்பட்டி சாலையில் சென்றுகொண்டிருந்தாா்.

அப்போது அவருக்கு பின்னால் வந்த தனியாா் பேருந்து கொப்பம்பட்டி மின் நிலையம் அருகே பரமேஸ்வரி ஓட்டி வந்த வாகனத்தின் மீது மோதி மரத்தின் மீது மோதி நின்றது.

இதில் காயமடைந்த பரமேஸ்வரி, அவரது 2 பிள்ளைகளையும் மீட்டு அருகில் இருந்தவா்கள் மீட்டு துறையூா் அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனா்.

சிறுமி வழியிலேயே உயிரிழந்துவிட்டதாக அவரைப் பரிசோதித்த மருத்துவா்கள் தெரிவித்தனா். உப்பிலியபுரம் போலீஸாா் வழக்குப் பதிந்து தனியாா் பேருந்து ஓட்டுநா் நசீரிடம் விசாரிக்கின்றனா்.