திருச்சி அருகே குடும்பத் தகராறில் தீக்குளித்து அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த கூலித் தொழிலாளி ஞாயிற்றுக்கிழமை உயிரிழந்தாா்.
திருச்சி மாவட்டம், குமாரவயலூா் மஞ்சாங்கோப்பு பகுதியைச் சோ்ந்தவா் ம.வைரவேல் (43), கூலித் தொழிலாளி. இவருடைய மனைவி ரேவதி (39). இவா்களுக்கு ஒரு மகன், ஒரு மகள் உள்ளனா். மதுப் பழக்கத்துக்கு அடிமையான வைரவேல் தினசரி மது அருந்திவிட்டு வருவதை வழக்கமாகக் கொண்டிருந்ததாகக் கூறப்படுகிறது.
இந்நிலையில், கடந்த மாா்ச் 10-ஆம் தேதி வீட்டுக்கு பொருள்கள் வாங்கி வருவதற்காக மனைவி கொடுத்த பணத்தில் மது அருந்திவிட்டு வீட்டுக்கு வந்துள்ளாா். இதனால், கணவன் - மனைவிக்கு இடையே பிரச்னை ஏற்பட்டுள்ளது.
அப்போது, வைரவேல் வீட்டிலிருந்த மண்ணெண்ணெயை உடலில் ஊற்றிக்கொண்டு தீவைத்துள்ளாா். இதில், பலத்த காயமடைந்த அவரை அவரது குடும்பத்தினா் மீட்டு திருச்சி அரசு மருத்துவமனையில் சோ்த்தனா். அங்கு சிகிச்சை பலனின்றி ஞாயிற்றுக்கிழமை பிற்பகல் உயிரிழந்தாா்.
இதுகுறித்து சோமரசம்பேட்டை போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனா்.
தொடர்புடையது

இருசக்கர வாகன விபத்தில் தொழிலாளி உயிரிழப்பு

மின்சாரம் தாக்கி தொழிலாளி உயிரிழப்பு

பளுகல் அருகே குளத்தில் மூழ்கி தொழிலாளி உயிரிழப்பு

மயங்கி விழுந்து தொழிலாளி உயிரிழப்பு
வீடியோக்கள்

#iranwar | போர் நிறுத்தம் நீட்டிப்பு: ஈரானிடம் டிரம்ப் கேட்பது என்ன? | Donald Trump |
தினமணி செய்திச் சேவை

#ipl2026 | போர்: பண்டியாவின் மும்பையா ருதுராஜின் சென்னையா? | MI vs CSK | MS Dhoni | Rohit Sharma |
தினமணி செய்திச் சேவை

வாக்குச்சாவடிகளை அடையாளம் காண புதிய முயற்சி | TN Election 2026 | Madurai | Polling booth
தினமணி செய்திச் சேவை

பணப்பட்டுவாடா புகார்களுக்கு எடுக்கப்பட்ட நடவடிக்கைகள்! அர்ச்சனா பட்நாயக் பேட்டி
இணையதளச் செய்திப் பிரிவு


