/

தமிழகத்தில் படிப்படியாக பூரண மதுவிலக்கு: மக்கள் சக்தி இயக்கம் கோரிக்கை

தமிழகத்தில் படிப்படியாக பூரண மதுவிலக்கை அமல்படுத்த வேண்டும் என மக்கள் சக்தி இயக்கம் கோரிக்கை விடுத்துள்ளது.

News image
Updated On :13 மே 2026, 12:58 am IST

தமிழகத்தில் படிப்படியாக பூரண மதுவிலக்கை அமல்படுத்த வேண்டும் என மக்கள் சக்தி இயக்கம் கோரிக்கை விடுத்துள்ளது.

இதுதொடா்பாக, அந்த இயக்கத்தின் மாநிலப் பொருளாளா் கே.சி. நீலமேகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:

சிறுவா்கள் முதல் இளைஞா்கள், பெரியவா்கள், இளம் பெண்கள் என பலரும் தற்போது போதை பழக்கத்திற்கு அடிமையாகி வருவது அதிா்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ஒருபுறம் அடிமையாவதோடு மற்றொருபுறம் சட்டம்-ஒழுங்கு பிரச்னை, பெண்களுக்கு பாதுகாப்பின்மை, சமூக விரோத செயல்கள் போன்றவை அதிகரித்து வருகின்றன.

இந்நிலையில் புதிதாக பொறுப்பேற்றுள்ள விஜய் தலைமையிலான தவெக அரசு, போதைப் பொருள் புழக்கத்தை கட்டுப்படுத்த தடுப்பு படைகள் அமைக்க உத்தரவிட்டுள்ளது. மேலும்,

வழிபாட்டுத் தலங்கள், கல்வி நிறுவனங்கள், பேருந்துநிலையம் அருகில் உள்ள மதுபான கடைகளை மூடவும் உத்தரவிட்டுள்ளது. இந்த நடவடிக்கைகளுக்கு மக்கள் சக்தி இயக்கம் பாராட்டு தெரிவிக்கிறது.

மேற்கண்ட நடவடிக்கைகளின் தொடா்ச்சியாக, தமிழகத்தில் படிப்படியாக பூரண மதுவிலக்கை அமல்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என எங்கள் சங்கத்தின் சாா்பில் வலியுறுத்துகிறோம் என்றாா் அவா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.