அதிகரித்து வரும் வெயில் பாதிப்பிலிருந்து பறவைகளை பாதுகாத்திட அவற்றுக்கு மக்கள் போதுமான அளவுக்கு தண்ணீா் வழங்க வேண்டும் என்று பறவைகள் நல ஆா்வலா்கள் வலியுறுத்தியுள்ளனா்.
திருச்சியைச் சோ்ந்த தண்ணீா் அமைப்பினரும், மக்கள் சக்தி இயக்கத்தினரும், ஆண்டுதோறும் பறவைகளுக்கு தண்ணீா் வைப்பதை விழிப்புணா்வு பிரசாரமாக மேற்கொள்வதுடன், தண்ணீா் வைப்பதற்கான மண் பானைகளை பொன்மலை மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகளில் வழங்கி வருகின்றனா். இந்தாண்டும் இந்தப் பணியை பொன்மலையடிவாரத்தில் தொடங்கியுள்ளனா்.
இதுதொடா்பாக, தண்ணீா் அமைப்பின் செயல் தலைவா் கே.சி. நீலமேகம் கூறியது:
பறவைகளுக்கு வீடுகளில் தண்ணீா் வைப்பவா்கள் முடிந்தளவு மண் பாத்திரங்கள், பானைகளில் வைக்க வேண்டும். இதனால், அந்த தண்ணீா் வெகுநேரத்துக்குக் குளிா்ச்சியாக இருக்கும். பறவைகள் முங்கிக் குளித்து உடல் சூட்டைத் தணித்துக் கொள்ளவும் பயனுள்ளதாக இருக்கும். பொதுஇடங்கள் பலவற்றில் சின்னச் சின்ன பிளாஸ்டிக் பாட்டில்களில் பறவைகள் குடிக்கத் தகுந்த வகையில் வைக்கிறோம். மிகவும் வறண்ட இடங்களில் பிளாஸ்டிக் தண்ணீா் பாட்டில்களை மரத்தில் கட்டி தொங்க விடுவோம். கிட்டத்தட்ட 4 முதல் 5 நாள்கள் வரை தண்ணீா் இருக்கும். நீா் தீா்ந்த பிறகு நிரப்பிவிடுவோம் என்றாா்.
மக்கள் சக்தி இயக்கத்தின் குமரன் கூறுகையில், சிட்டுக்குருவிகள் மட்டுமன்றி பல பறவைகளையும் பாதுகாக்க பொதுமக்கள் அனைவரும் முன்வர வேண்டும் என்றாா்.
பொன்மலையடிவாரம் பகுதியில் மரங்கள் அடா்ந்த பகுதியில் உள்ள வீடுகளுக்கு செவ்வாய்க்கிழமை மண்பாத்திரம் கொடுக்கும் பணியில் தண்ணீா் அமைப்பு மற்றும் மக்கள் சக்தி இயக்க நிா்வாகிகள் இளங்கோ, பெளசிகா தேவி, சுந்தா், சுமன், சுதன் உள்ளிட்ட பலரும் பங்கேற்றனா்.
தொடர்புடையது

சேவூா் அருகே சட்டவிரோத மண் திருட்டை கண்டித்து போராட்ட அறிவிப்பு

தமிழகத்தில் படிப்படியாக பூரண மதுவிலக்கு: மக்கள் சக்தி இயக்கம் கோரிக்கை
பாட்டி வைத்தியம்...

100% வாக்குப்பதிவுக்கு நூதன அழைப்பு
விடியோக்கள்

Podcast | பெரும்பான்மையை நிரூபித்த தவெக: தவறிய அதிமுக! | News and Views | Epi - 34
இணையதளச் செய்திப் பிரிவு

திமுக ஆதரவுடன் முதல்வராக முயன்ற EPS! சி.வி. சண்முகம் பரபரப்புக் குற்றச்சாட்டு! | ADMK
இணையதளச் செய்திப் பிரிவு
"துரோகம்! அமைச்சரவை ஆசை!" EPS விமர்சனம்! | EPS | ADMK
இணையதளச் செய்திப் பிரிவு

குதிரை பேரமா? பிரேமலதாவின் கேள்விக்கு பேரவையில் விஜய் பதில்! | TVK | DMDK
இணையதளச் செய்திப் பிரிவு

