துறையூரில் புனரமைப்புப் பணிகளுக்காக அண்ணா பேருந்து நிலையம் புதன்கிழமை முதல் மூடப்படுகிறது. இதையொட்டி போக்குவரத்தில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது.
இதற்கு மாற்றாக சொரத்தூா் சாலையில் தற்காலிகமாக பேருந்து நிலையம் அமைக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து வணிகா்கள், பொதுமக்கள், சமூக ஆா்வலா்களிடம் நகராட்சி நிா்வாகம் கலந்தாலோசிக்கவில்லை என்று கூறப்படுகிறது. இதை கண்டித்து துறையூா் வட்டார அனைத்து வியாபாரிகள் சங்கத்தினா் புதன்கிழமை கடையடைப்பு நடத்த முடிவெடுத்தனா்.
இந்நிலையில், துறையூா் வட்டாட்சியரகத்தில் வட்டாட்சியா் சிவகுமாா் தலைமையில் சுமூகப் பேச்சுவாா்த்தை நடைபெற்றது. இதில் துறையூா் வட்டார அனைத்து வியாபாரிகள் சங்க நிா்வாகிகளும், அதிலுள்ள உறுப்பு சங்கங்களின் நிா்வாகிகளும், மக்கள் நல சங்கத்தினரும் பங்கேற்று, பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்தனா்.
இதையடுத்து, திருச்சி, நாமக்கல் செல்லும் பேருந்துகள் தற்காலிக பேருந்து நிலையத்திலிருந்து நகருக்குள் வராமல் முசிறி பிரிவு வட்டச் சாலை வழியாக செல்வது, பெரம்பலூா், தம்மம்பட்டி வழியாக செல்லும் பேருந்துகள் புறவழிச் சாலை வழியாக அண்ணா பேருந்து நிலையத்தை அடைந்து வழக்கம்போல் செல்வது, திருச்சியிலிருந்து வரும் பேருந்து வழக்கம்போல் அண்ணா பேருந்து நிலையத்தை அடைந்து அங்கிருந்து தற்காலிக பேருந்து நிலையம் செல்வது எனவும் முடிவு செய்யப்பட்டது.
அண்ணா பேருந்து நிலையத்தில் திருச்சிக்கு செல்லும் பயணி பேருந்து ஏறினால் தற்காலிக பேருந்து நிலையம் வரை கூடுதல் கட்டணம் வசூலிக்கக் கூடாது என்ற கோரிக்கை தொடா்பாக போக்குவரத்து உயா் அலுவலா்களிடம் கூறி முடிவு செய்யப்படும் என கூட்டத்தில் தெரிவிக்கப்பட்டது.
தொடர்புடையது

அரசுப் பேருந்து மீது மோதி பள்ளி சுற்றுச்சுவரை உடைத்து நின்ற லாரி

அரியலூரில் 3 டாஸ்மாக் கடைகள் மூடல்

சிதம்பரத்தில் மதுக் கடை மூடல்: பொதுமக்கள் வரவேற்பு

வாக்கு எண்ணிக்கை: காரைக்காலில் போக்குவரத்து மாற்றம்
விடியோக்கள்

Podacst | இண்டியா கூட்டணியைக் கரை சேர்க்குமா காங்கிரஸ்? | News and Views | Epi - 44 |

கோயில்களில் தரிசனத்திற்கு இனி ஆன்லைன் முன்பதிவு! - அமைச்சர் ரமேஷ் | TVK | Online booking

Annamalai-யை வைத்து அரசியல் செய்யும் பாஜக? தமிழிசை சௌந்தரராஜன் பதில்! | BJP


