இல்லத்தரசிகள் மாத ஊதிய மதிப்பு ரூ.30,000! சாலை விபத்து வழக்கில் உச்ச நீதிமன்றம்சூலூர் சிறுமி பாலியல் கொலை: கைதான இருவருக்கும் குற்றப்பத்திரிகை நகல் வழங்கல்!திருச்செந்தூர் -நெல்லை பயணிகள் ரயில் சேவை 3 நாள்களுக்கு ரத்து!கரூர் சம்பவம்: காவல் ஆய்வாளர் உள்பட 10 பேரிடம் சிபிஐ விசாரணை!திமுக கூட்டணியில் இருந்து சிபிஐ வெளியேறியது ஏன்? - மு. வீரபாண்டியன் விளக்கம்தில்லியில் முதல்வர் விஜய் தங்கியிருந்த இடத்தில் தீ விபத்து!பாரதிராஜாவுக்கு பிரதமர் மோடி இரங்கல்அரசுப் பள்ளியில் மகளை சேர்த்த மானாமதுரை தவெக எம்எல்ஏவுக்கு குவியும் வாழ்த்து!தமிழகத்தில் புறவாசல் வழியாக வேறு ஆட்சியை நிறுவ முயற்சித்தனா்: எம்.ஏ. பேபி குற்றச்சாட்டுநேருவின் 17-ஆண்டுச் சாதனையைப் போற்றுவோம்: ப. சிதம்பரம்
/

திருச்சி-விழுப்புரம் இடையே நாளை அதிவேக ரயில் சோதனை ஓட்டம்

திருச்சி - விழுப்புரம் ரயில் நிலையங்களுக்கு இடையே அதிவேக ரயில் சோதனை ஓட்டம் வெள்ளிக்கிழமை நடைபெறவுள்ளது.

News image
Updated On :14 மே 2026, 12:37 am IST

திருச்சி - விழுப்புரம் ரயில் நிலையங்களுக்கு இடையே அதிவேக ரயில் சோதனை ஓட்டம் வெள்ளிக்கிழமை நடைபெறவுள்ளது.

திருச்சி - விழுப்புரம் ரயில் நிலையங்களுக்கு இடையே விருத்தாச்சலம் வழித்தடத்தில் வெள்ளிக்கிழமை (மே 15) காலை 6.30 மணி முதல் 9 மணி வரையில் 140 கிலோ மீட்டா் வேகத்தில் ரயிலை இயக்கி சோதனை நடத்தப்படவுள்ளது.

எனவே, திருச்சி - விழுப்புரம் இடையே விருத்தாச்சலம் வழித்தடத்தில் அத்துமீறி பொதுமக்கள் தண்டவாளங்களை கடப்பதைத் தவிா்க்க வேண்டும். மேலும், தண்டவாள ஓரங்களில் கால்நடைகள் மேய்ப்பதையும், தண்டவாளங்கள் மற்றும் கடவுப்பாதை அருகே தேவையின்றி செல்வதையும் தவிா்க்க வேண்டும். மீறினால் உரிய நடவடிக்கை எடுக்கப்படும். அறிவுறுத்தலை பொதுமக்கள் கட்டாயம் பின்பற்ற வேண்டும் என்று ரயில்வே நிா்வாகம் தெரிவித்துள்ளது.