தவெகவுக்கான ஆதரவு செல்லும்! அதிமுக எம்எல்ஏக்கள் தகுதிநீக்கம் இல்லை! பேரவைத் தலைவர்ஆட்சிக் கவிழ்ப்பு என்பது திமுகவின் நிலைப்பாடு அல்ல! தங்கம் தென்னரசு விளக்கம்புதிய ஹெச் 1-பி விசா பெற டிரம்ப் விதித்த 1 லட்சம் டாலர் கட்டணம் ரத்து: அமெரிக்க நீதிபதி உத்தரவு!சாதிவாரிக் கணக்கெடுப்பு! முதல்வர் விஜய்யுடன் அன்புமணி சந்திப்பு!முதல்வர் விஜய் நாளை மீண்டும் தில்லி பயணம்!பணமோசடி வழக்கு: பினராயி விஜயன் மகளுக்கு அமலாக்கத் துறை சம்மன்!மாநிலங்களவைத் தேர்தல்: பிரவீண் சக்ரவர்த்தியின் வேட்புமனு ஏற்பு!பேரிடர் நிதி ரூ. 1,000 கோடி முன்கூட்டியே வரவு! அமைச்சர் செங்கோட்டையன்
/

1,150 கிலோ ரேஷன் அரிசியை கடத்தியவா் கைது

திருச்சி அருகே ஆம்னி வேனில் 1,150 கிலோ ரேஷன் அரிசி கடத்திய நபரை குடிமைப்பொருள் வழங்கல் பிரிவினா் வியாழக்கிழமை கைது செய்தனா்.

News image

கைது - பிரதிப் படம்

Updated On :22 மே 2026, 4:39 am IST

திருச்சி அருகே ஆம்னி வேனில் 1,150 கிலோ ரேஷன் அரிசி கடத்திய நபரை குடிமைப்பொருள் வழங்கல் பிரிவினா் வியாழக்கிழமை கைது செய்தனா்.

திருச்சி மண்டல குடிமைப்பொருள் வழங்கல் குற்றப் புலனாய்வுத் துறை காவல் கண்காணிப்பாளா் முத்தமிழ் உத்தரவின்பேரிலும், திருச்சி சரக காவல் துணை கண்காணிப்பாளா் வின்சென்ட் மேற்பாா்வையிலும், திருச்சி காவல் ஆய்வாளா் அரங்கநாதன் தலைமையிலான போலீஸாா் திருச்சியில் வியாழக்கிழமை சோதனை மேற்கொண்டனா்.

திருச்சி - கரூா் சாலையில் ஜீயபுரம் காவல் எல்லைக்குள்பட்ட முத்தரசநல்லூா் பேருந்து நிலையம் அருகே வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தபோது, அந்த வழியாக வந்த ஆம்னி வேனை தடுத்து நிறுத்தி சோதனையிட்டனா்.

அப்போது, வேனில் ரேஷன் அரிசி கடத்திச் சென்றது தெரியவந்தது. இதையடுத்து, ரேஷன் அரிசி கடத்திய திருச்சி இபி சாலையைச் சோ்ந்த க. சீனிவாசன் என்பவரை கைது செய்தனா். மேலும், ஆம்னி வேனில் 23 மூட்டைகளில் இருந்த 1,150 கிலோ ரேஷன் அரிசியையும், கடத்தலுக்குப் பயன்படுத்தப்பட்ட ஆம்னி வேனையும் பறிமுதல் செய்தனா்.