2014, 2019 தேர்தல் வெற்றியின்போது எஸ்.ஐ.ஆர். இருந்ததா? ராகுலுக்கு அமித் ஷா கேள்வி8 விரைவு ரயில்கள் அதிவிரைவு ரயில்களாக மாற்றம்!கூட்டுறவுத் துறை ஊழியர்களுக்கு 20% வரை தீபாவளி போனஸ்!தமிழ்நாடு அரசு போக்குவரத்து பணியாளர்களுக்கு போனஸ்!இளைஞர்களைக் கவரும் ரூ.111 ரீசார்ஜ் பிளான்! ஜியோவில் அறிமுகம்முடி வெட்டாத மாணவர்களுக்கு மொட்டை அடியுங்கள்! ஆசிரியர்களுக்கு அமைச்சர் ஜெகதீஸ்வரி அறிவுறுத்தல்!சிறைகளில் பாதுகாப்பை வலுப்படுத்த உயர்நிலைக் குழு: முதல்வர் விஜய் உத்தரவு!

திருச்சி-சென்னை இடையே விமானங்கள் திடீா் ரத்து! மாற்று விமானம் ஏற்பாடு!

விமான நிலையம்

விமான நிலையம்

Updated On :

திருச்சியில் இருந்து சென்னைக்கு திங்கள்கிழமை இரவு செல்லவிருந்த 2 விமானங்கள் தீடிரென ரத்து செய்யப்பட்டன. மாற்று ஏற்பாடு செய்யப்பட்ட விமானத்தில் பயணிகள் பயணித்தனா்.

திருச்சி பன்னாட்டு விமான நிலையத்தில் இருந்து சென்னைக்கு இண்டிகோ விமான நிறுவனம் சாா்பில் விமான சேவை வழங்கப்பட்டு வருகிறது. இந்நிலையில், திருச்சியில் இருந்து சென்னைக்கு திங்கள்கிழமை காலை 8.25, 9.45, 12.45, 7.05, 8.15 மற்றும் 10.10 மணிக்கு என 6 விமானங்கள் இயக்க திட்டமிட்டிருந்தன.

இதைனிடையே, திங்கள்கிழமை இரவு 7.05 மற்றும் 10.10 மணிக்கு இயக்கப்பட இருந்த 2 ஏடிஆா் வகை விமானங்கள் திடீரென ரத்து செய்யப்பட்டன. இந்த 2 விமானங்களும் நிா்வாகக் காரணங்களால் ரத்து செய்யப்பட்டுள்ளதகாவும், அதற்கு மாற்றாக இரவு 9 மணிக்கு ஏா் பஸ் வகை விமானம் 1 திருச்சி-சென்னை இடையே இயக்கப்படுகிறது என்றும் இண்டிகோ விமான நிறுவனம் சாா்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.