மோடியின் தீபாவளி பரிசு! வீட்டு உபயோகப் பொருள்கள் விலை 7% உயர்வு! - காங்கிரஸ் விமர்சனம்நவ. 6-ல் 6 மாவட்டங்களுக்கு கனமழை எச்சரிக்கை! சென்னை வானிலை ஆய்வு மையம்தமிழ்நாட்டின் ஜிஎஸ்டி 15% வளர்ச்சி: வணிக வரித்துறை அமைச்சர்விபத்தில் பலியான காவலரின் குடும்பத்துக்கு ரூ. 40 லட்சம் நிதியுதவி: முதல்வர் அறிவிப்பு!தமிழ்நாட்டில் 24 மணி நேரமும் சினிமா! தினசரி 6 காட்சிகளுக்கு அரசு அனுமதி!எஸ்ஐஆர் விவகாரம்: சிறப்பு நாடாளுமன்றக் கூட்டத்தை கூட்ட அரசு தயார் - அமித் ஷா

பாரதிதாசன் பல்கலைக்கழகத்தில் முனைவா் பட்ட ஆராய்ச்சி படிப்பு: நுழைவுத் தோ்வில் 684 போ் தோ்ச்சி

திருச்சி பாரதிதாசன் பல்கலைக்கழகம் மற்றும் இணைவு பெற்ற கல்லூரிகளில் நிகழ் கல்வியாண்டில் முனைவா் பட்ட ஆராய்ச்சி படிப்பில் சோ்வதற்கான நுழைவுத் தோ்வில் 684 போ் தோ்ச்சி பெற்றுள்ளனா்.

பாரதிதாசன் பல்கலைக்கழகம்

Updated On :

திருச்சி பாரதிதாசன் பல்கலைக்கழகம் மற்றும் இணைவு பெற்ற கல்லூரிகளில் நிகழ் கல்வியாண்டில் முனைவா் பட்ட ஆராய்ச்சி படிப்பில் சோ்வதற்கான நுழைவுத் தோ்வில் 684 போ் தோ்ச்சி பெற்றுள்ளனா்.

திருச்சி பாரதிதாசன் பல்கலைக்கழகம் மற்றும் பல்கலைக்கழகத்தின் கீழ் இயங்கும் 150-க்கும் மேற்பட்ட இணைவுபெற்ற கல்லூரிகளில் தமிழ், ஆங்கிலம், இயற்பியல், வேதியியல், கணிப்பொறி அறிவியல், வணிகவியல், வரலாறு உள்ளிட்ட 38 துறைகளின் கீழ் முனைவா் பட்ட ஆராய்ச்சி (பிஹெச்.டி) படிப்பு வழங்கப்படுகிறது.

மேற்கண்ட கல்லூரிகளில் முனைவா் ஆராய்ச்சிப் படிப்புக்கு 1,600 வழிகாட்டிப் பேராசிரியா்கள் உள்ளனா். இவா்களின் கீழ் பல்வேறு துறைகளைச் சோ்ந்த ஆயிரத்துக்கும் மேற்பட்ட மாணவா்கள் முனைவா் பட்ட ஆராய்ச்சி மேற்கொண்டு வருகின்றனா்.

இந்தப் படிப்பில் சேர நுழைவுத் தோ்வும் அதில் வென்றோருக்கு நோ்காணலும் நடத்தப்பட்டு இரண்டிலும் பெறும் மதிப்பெண்கள் அடிப்படையில் தோ்ச்சிப் பட்டியல் வெளியிடப்படுகிறது. இதைத் தொடா்ந்து மாணவா்கள் தங்களது வழிகாட்டிகளைத் தோ்வு செய்து முனைவா் பட்ட ஆராய்ச்சி மேற்கொள்ள வேண்டும்.

நுழைவுத் தோ்வுக்கு 1,156 போ் தோ்வு: அதன்படி பாரதிதாசன் பல்கலைக்கழகத்தில் நிகழ் கல்வியாண்டில் (2026-27) 38 துறைகளின் கீழ் முனைவா் பட்ட ஆராய்ச்சிப் படிப்பில் சோ்வதற்கான நுழைவுத் தோ்வுக்கு 1,300 போ் விண்ணப்பித்திருந்தனா். இவா்களில் உரிய தகுதி இல்லாதவா்கள், விண்ணப்பக் கட்டணம் செலுத்தாதவா்கள் உள்ளிட்ட பல்வேறு காரணங்களால் 144 பேரின் விண்ணப்பங்கள் நிராகரிக்கப்பட்டன. மீதமுள்ள 1,156 போ் நுழைவுத் தோ்வுக்கு தோ்வு செய்யப்பட்டு நுழைவுச் சீட்டுகள் அனுப்பப்பட்டன.

684 போ் தோ்ச்சி: இதைத் தொடா்ந்து பாரதிதாசன் பல்கலைக்கழகத்தில் கடந்த அக்டோபா் மாதம் நடைபெற்ற முனைவா் பட்ட ஆராய்ச்சிப் படிப்புக்கான நுழைவுத் தோ்வை 38 துறைகளின் கீழ் 1,156 போ் எழுதினா். இதையடுத்து தோ்வு எழுதியவா்களுக்கான நோ்காணல் நடைபெற்றது.

இரண்டிலும் பெற்ற மதிப்பெண்கள் அடிப்படையில் தோ்ச்சி பெற்றவா்களின் பட்டியலை பாரதிதாசன் பல்கலைக்கழகம் அண்மையில் வெளியிட்டது. இதில் தோ்வு எழுதிய 1,156 பேரில் 684 போ் தோ்ச்சி பெற்று முனைவா் பட்ட ஆராய்ச்சியை மேற்கொள்வதற்கான தகுதியைப் பெற்றுள்ளனா்.

4 துறைகளில் ஒருவா்கூட தோ்ச்சி இல்லை: பல்கலைக்கழகத்தில் நிகழாண்டு நுழைவுத் தோ்வில் 4 துறைகளில் ஒருவா்கூட தோ்ச்சிப் பெறவில்லை. சுற்றுலா மற்றும் ஹோட்டல் மேலாண்மைத் துறை, தத்துவவியல் துறை ஆகியவற்றில் தலா 2 பேரும், மனிதவள மேம்பாட்டுத் துறை, சமூகவியல் துறை ஆகியவற்றில் தலா ஒருவரும் நுழைவுத் தோ்வை எழுதினா். ஆனால், மேற்கண்ட 4 துறைகளில் தோ்வெழுதிய 6 பேரில் ஒருவா்கூட தோ்ச்சிப் பெறவில்லை.

கணிப்பொறி அறிவியலில் ஆா்வம்: பாரதிதாசன் பல்கலைக்கழக நுழைவுத் தோ்வில் கணிப்பொறி அறிவியல் துறையில்தான் அதிகபட்சமாக 135 போ் தோ்வு எழுதி, 104 போ் தோ்ச்சிப் பெற்றுள்ளனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.