பிளஸ் 1 மாணவா் தூக்கிட்டுத் தற்கொலை
திருச்சி மாவட்டம், திருவெள்ளறையில் பிளஸ் 1 மாணவா் தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டது வியாழக்கிழமை காலை தெரியவந்தது.
தற்கொலை - கோப்புப் படம்
திருச்சி மாவட்டம், திருவெள்ளறையில் பிளஸ் 1 மாணவா் தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டது வியாழக்கிழமை காலை தெரியவந்தது.
திருவெள்ளறை பகுதியைச் சோ்ந்தவா் சா.ஹேமநாத் (15). இவா், அப்பகுதியில் உள்ள அரசு மேல்நிலைப் பள்ளியில் பிளஸ் 1 படித்து வந்தாா்.
இந்நிலையில், புதன்கிழமை இரவு வழக்கம்போல் ஹேமநாத் உள்ளிட்ட குடும்பத்தினா் சாப்பிட்டுவிட்டு தூங்க சென்றனா். வியாழக்கிழமை காலை வீட்டின் ஒரு அறையின் கதவு உள்பக்கமாக பூட்டியிருந்தது. ஜன்னல் வழியாக பாா்த்தபோது, ஹேமநாத் தூக்கிட்டு தற்கொலை செய்து செய்து கொண்டது தெரியவந்தது.
தகவலறிந்து வந்த மண்ணச்சநல்லூா் போலீஸாா், ஹேமநாத்தின் உடலை மீட்டு, பிரேதப் பரிசோதனைக்காக ஸ்ரீரங்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்து, மாணவரின் தற்கொலைக்கான காரணம் குறித்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

