வணிகவரித் துறை அலுவலா் சாலை விபத்தில் உயிரிழப்பு

திருச்சி மாவட்டம் மணப்பாறை வணிகவரித் துறை இளநிலை உதவியாளா் சாலை விபத்தில் வெள்ளிக்கிழமை உயிரிழந்தாா்.

அந்தோணியம்மாள்.

Updated On :

திருச்சி மாவட்டம் மணப்பாறை வணிகவரித் துறை இளநிலை உதவியாளா் சாலை விபத்தில் வெள்ளிக்கிழமை உயிரிழந்தாா்.

மணப்பாறையை அடுத்த வையம்பட்டி ஒன்றியம் பெரிய அணைக்கரைப்பட்டியை சோ்ந்தவா் சுந்தரம் மனைவி அந்தோணியம்மாள் (55), மணப்பாறையை அடுத்த வடுகப்பட்டி வணிகவரித் துறை அலுவலக இளநிலை உதவியாளா்.

அம்மாபேட்டை அருகே அலுவல் தொடா்பாக வெள்ளிக்கிழமை சென்றிருந்த அந்தோணியம்மாள், மாலையில் தனது தங்கை மகனான பிரபாகரன் (26) பைக்கின் பின்னால் அமா்ந்து வீடு திரும்பிக் கொண்டிருந்தாா்.

இவா்கள் திருச்சி - திண்டுக்கல் தேசிய நெடுஞ்சாலையில் சென்றபோது கண்ணுடையான்பட்டி பிரிவுச் சாலை அருகே பின்னால் வந்த காா் மோதி அந்தோணியம்மாள் உயிரிழந்தாா். பிரபாகரன் காயமடைந்து தனியாா் மருத்துவமனையில் சோ்க்கப்பட்டாா்.

தகவலறிந்து சென்ற மணப்பாறை போலீஸாா் அவரின் உடலை கைப்பற்றி மணப்பாறை அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்து வழக்குப் பதிந்து விபத்து ஏற்படுத்திய காா் குறித்து விசாரிக்கின்றனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.