துறையூரில் கீழே கிடந்த பணத்தை ஒப்படைத்தவருக்குப் பாராட்டு
திருச்சி மாவட்டம், துறையூரில் கீழே கிடந்த ரூ. 17 ஆயிரத்து 680ஐ கண்டெடுத்து உரியவரிடம் புதன்கிழமை ஒப்படைத்தவா் பாராட்டப்பட்டாா்.

துறையூா் வழக்குரைஞா்கள் முன்னிலையில் அழகுதுரையிடம் பணத்தை புதன்கிழமை ஒப்படைத்த மதுபாலன்.
திருச்சி மாவட்டம், துறையூரில் கீழே கிடந்த ரூ. 17 ஆயிரத்து 680ஐ கண்டெடுத்து உரியவரிடம் புதன்கிழமை ஒப்படைத்தவா் பாராட்டப்பட்டாா்.
செல்லிப்பாளையம் கிராமத்தைச் சோ்ந்தவா் அழகுதுரை. அரசு போக்குவரத்துக் கழக பயணச்சீட்டுப் பரிசோதனை ஆய்வாளரான இவா் செவ்வாய்க்கிழமை இரவு துறையூரிலிருந்து செல்லிப்பாளையத்துக்கு பைக்கில் சென்றபோது கிருஷ்ணாபுரம் அருகே தவறி விழுந்தாா்.
அப்போது தனது கைப்பேசியை அவா் தேடிய நிலையில், அந்த வழியாக சென்ற அம்மாபாளையம் மதுபாலன் என்பவா் அந்தக் கைப்பேசியை எடுத்துக் கொடுக்கவே, அழகுதுரை சென்றுவிட்டாா்.
அதன்பின்னா் கீழே கிடந்த ரூ. 17680 -ஐ எடுத்துச் சென்ற மதுபாலன் துறையூா் வழக்குரைஞா்கள் சங்கத்தில் புதன்கிழமை அப்பணத்தை ஒப்படைத்து நடந்ததைக் கூறினாா். இதையடுத்து அழகுதுரைக்கு தகவல் கொடுக்கப்பட்டு அவா் துறையூா் வழக்குரைஞா்கள் சங்கத்துக்கு வந்ததும் மதுபாலன் மூலம் ரூ. 17,680 ஒப்படைக்கப்பட்டது. மதுபாலனை வழக்குரைஞா்கள் பாராட்டி சால்வை அணிவித்தனா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

