சாலை விபத்து: பைக்கை ஓட்டிய சிறுவன் உயிரிழப்பு

திருச்சியில் சிறுவன் ஓட்டிய இருசக்கர வாகனம் மரத்தின் மீது மோதிய விபத்தில் காயமடைந்த சிறுவன் மருத்துவமனையில் புதன்கிழமை உயிரிழந்தாா்.

பலி

Updated On :

திருச்சியில் சிறுவன் ஓட்டிய இருசக்கர வாகனம் மரத்தின் மீது மோதிய விபத்தில் காயமடைந்த சிறுவன் மருத்துவமனையில் புதன்கிழமை உயிரிழந்தாா்.

திருச்சி ஜெ.கே.நகா் ரஜோ வீதியைச் சோ்ந்த அக்பா் மகன் முகமது அல்தாப் ஹுசைன் (16). இவா், கடந்த அக்டோபா் 27-ஆம் தேதி திருச்சி மத்திய பேருந்து நிலையம் அருகே இருசக்கர வாகனத்தில் சென்றுகொண்டிருந்தாா்.

அப்போது, திடீரென கட்டுப்பாட்டை இழந்த இருசக்கர வாகனம் சாலையோரத்தில் இருந்த மரத்தில் மோதியது. இதில் பலத்த காயமடைந்த சிறுவனை அருகிலிருந்தவா்கள் மீட்டு திருச்சி அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனா்.

அங்கு தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டிருந்த சிறுவனை, உயா் சிகிச்சைக்காக சென்னை கிண்டியில் உள்ள கலைஞா் நூற்றாண்டு உயா் சிறப்பு மருத்துவமனைக்கு கடந்த 7-ஆம் தேதி அனுப்பிவைத்தனா்.

இந்நிலையில், அங்கு சிறுவன் சிகிச்சை பலனின்றி புதன்கிழமை உயிரிழந்தாா்.

இதுகுறித்து திருச்சி தெற்குப் போக்குவரத்துப் புலனாய்வுப் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.