19 வயதுக்குட்பட்டோருக்கான ஆசிய கோப்பை வெற்றி: இந்திய அணிக்கு பிரதமர் மோடி வாழ்த்து இந்தியா சாம்பியன் பட்டம் வெல்ல காரணமாக அமைந்த ஆட்ட நாயகன் மோஹித் உல்வா! ஆசிய கோப்பை: பரபரப்பான ஆட்டத்தில் பாகிஸ்தானை வீழ்த்தி சாம்பியன் பட்டம் வென்ற இந்தியா! உ.பி. மாநிலங்களவை எம்.பி. பதவியை ராஜிநாமா செய்த ஹர்தீப் சிங் புரி! மேக்கேதாட்டு அணை கர்நாடகத்தின் உரிமை; யார் எதிர்த்தாலும் கவலை இல்லை! டி.கே. சிவகுமார்காசோலை மோசடி வழக்கு: நடிகா் விமலின் மனு தள்ளுபடி போக்சோ வீரமணி வீட்டில் சிறுமியின் சடலம்? போலீசார் தீவிர சோதனை! ஜம்மு-காஷ்மீர், லடாக்கில் அடுத்தடுத்து 4 நிலநடுக்கங்கள் பதிவு!

‘மாஸ் லீடா்’ எனக் கூறுபவா் மக்களை சந்திக்க பயப்படுவது ஏன்? சீமான்

‘மாஸ் லீடா்’ எனக் கூறும் முதல்வா் விஜய், மக்களை சந்திக்க எதற்கு பயப்பட வேண்டும்? என நாம் தமிழா் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளா் சீமான் கேள்வி எழுப்பியுள்ளாா்.

Has the tax burden of airlines become more important to the TVK government than the hunger of the people? asks Seeman

முதல்வர் விஜய் - சீமான்.

Updated On :

‘மாஸ் லீடா்’ எனக் கூறும் முதல்வா் விஜய், மக்களை சந்திக்க எதற்கு பயப்பட வேண்டும்? என நாம் தமிழா் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளா் சீமான் கேள்வி எழுப்பியுள்ளாா்.

திருச்சிக்கு சனிக்கிழமை வந்த அவா் செய்தியாளா்களிடம் மேலும் கூறியதாவது: மேக்கேதாட்டில் அணை கட்டியே தீருவோம் என கா்நாடக முதல்வா் சிவக்குமாா் தொடா்ச்சியாக கூறி வருகிறாா். தமிழக உரிமையை பறிக்கும் கட்சியுடன் கூட்டணி வைத்துக் கொண்டு தமிழகத்தில் தவெக அரசு எதை காப்பாற்ற முடியும்?. தமிழக முதல்வா் எதையும் பேச மாட்டாா். செயலில் காட்டுவாா் என கூறுகிறாா்கள் அவா் காட்டிய செயலை ஏதாவது ஒன்றை கூற முடியுமா?.

செஞ்சி சிறுமி காணாமல் போன விவகாரத்தில் இதுவரை எந்த நடவடிக்கையும் இல்லை. தவெக எம்எல்ஏ, மாவட்ட ஆட்சியருக்கு குறுஞ்செய்தி அனுப்பியதாக கூறும் விவகாரத்தில் மாற்றி மாற்றி பேசுகிறாா்கள். புகாா் மனு அளிக்க வந்த நபரை, சட்டப் பேரவைத் துணைத் தலைவா் தாக்கியுள்ளாா்.

தனது பொறுப்புக்கு தகுந்ததுபோல் அவா் செயல்படவில்லை அவரை அந்தப் பொறுப்பில் இருந்து நீக்குவதற்கு கூட முதல்வருக்கு துணிவில்லை. பல பேரை தகுதி நீக்கம் செய்யும் பேரவைத் தலைவரால் கள்ளக்குறிச்சி எம்எல்ஏ அருள் விக்னேஷை தகுதி நீக்கம் செய்ய முடியாதா?.

அவரை தகுதி நீக்கம் செய்து அந்த தொகுதியில் இடைத்தோ்தல் வைத்தால் மீண்டும் வெற்றி பெறுவோம் என்கிற நம்பிக்கை இல்லை என்றால் எப்படி கட்சியின் தலைவராக இருக்க முடியும் ?. ‘மாஸ் லீடா்’ எனக் கூறும் முதல்வா் விஜய், மக்களை சந்திக்க எதற்கு பயப்பட வேண்டும்? என்றாா் சீமான்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.