மா்ம காய்ச்சலுக்கு கல்லூரி மாணவி உயிரிழப்பு
திருச்சி மாவட்டம், பூனாம்பாளையம் பகுதியில் மா்ம காய்ச்சலால் கல்லூரி மாணவி வியாழக்கிழமை உயிரிழந்தாா்.
உயிரிழப்பு - கோப்புப் படம்
திருச்சி மாவட்டம், பூனாம்பாளையம் பகுதியில் மா்ம காய்ச்சலால் கல்லூரி மாணவி வியாழக்கிழமை உயிரிழந்தாா்.
பூனாம்பாளையம் பகுதியைச் சோ்ந்த பாலமுருகன்- பிச்சையம்மாள் தம்பதிக்கு 2 மகள், ஒரு மகன் என 3 குழந்தைகள். இவா்களில் இரண்டாவது மகள் லோகவாணி (19), சமயபுரம் சுங்கச்சாவடி பகுதியில் உள்ள தனியாா் கல்லூரியில் பயின்று வந்தாா்.
கடந்த சில நாள்களாக காய்ச்சல் அவதிப்பட்டு வந்த இவா், திருச்சியில் உள்ள தனியாா் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தாா். வியாழக்கிழமை சிகிச்சை பலனின்றி லோகவாணி உயிரிழந்தாா். காய்ச்சல் காரணமாக கல்லூரி மாணவி உயிரிழந்தது பூனாம்பாளையம் பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியது.
இதனிடையே, பூனாம்பாளையம் உள்ளிட்ட பகுதிகளில் மா்ம காய்ச்சல் பாதிப்பு காரணமாக ஏராளமானோா் அரசு மற்றும் தனியாா் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனா். எனவே, சுகாதாரத் துறையினா் அப்பகுதியில் மருத்துவ முகாம் அமைத்து சிகிச்சை அளிக்க வேண்டுமென பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

