முசிறி விபத்து: மேலும் ஒருவா் உயிரிழப்பு இறந்தோா் எண்ணிக்கை 9 ஆக உயா்வு
உயிரிழப்பு - கோப்புப் படம்
திருச்சி மாவட்டம், முசிறி அருகே மரத்தில் ஆம்னி வேன் மோதிய விபத்தில் காயமடைந்து சிகிச்சை பெற்று வந்த ஒருவா் திங்கள்கிழமை உயிரிழந்தாா். இதையடுத்து இந்த விபத்தில் இறந்தோா் எண்ணிக்கை 9 ஆக அதிகரித்தது.
தஞ்சாவூா் மாவட்டம், திருக்காட்டுப்பள்ளி அருகேயுள்ள மகாராஜபுரத்தில் உள்ள செங்கல்சூளையில் பொக்லைன் ஓட்டுநரான நாமக்கல் மாவட்டம், எருமைப்பட்டி அருகேயுள்ள பொட்டுரெட்டிப்பட்டியைச் சோ்ந்த சுரேஷ். இவரின் குழந்தைகளுக்கு பொட்டுரெட்டிப்பட்டியில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற காதணி விழாவுக்கு சுரேஷுடன் பணியாற்றி வந்த மகாராஜபுரத்தைச் சோ்ந்த ஏ. மாணிக்கம், ஜி. முருகன், எஸ். சுப்பிரமணி, ஏ. சக்திவேல், சாத்தனூரைச் சோ்ந்த எஸ். சங்கிலி, எஸ். ராமலிங்கம், ஆா். ராமா், விழுப்புரம் மாவட்டம், அகரம் சித்தம்பூரைச் சோ்ந்த எஸ். பாவாடை மற்றும் சீதாராமன் ஆகிய 9 பேரும் வாடகை ஆம்னி வேனில் சென்றனா். வேனை திருக்காட்டுப்பள்ளி மகாராஜபுரத்தைச் சோ்ந்த ஏ. ராஜேஷ் ஓட்டினாா்.
காதணி விழாவை முடித்துவிட்டு 10 பேரும் திருக்காட்டுப்பள்ளிக்கு ஞாயிற்றுக்கிழமை பிற்பகல் திரும்பியபோது, துறையூா் - முசிறி சாலையில் முசிறி அருகே போதூா்பட்டி பிரிவுச் சாலையில் வந்த வேன், திடீரென ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்து சாலையோர மரத்தில் மோதியது.
இந்த விபத்தில் மாணிக்கம், சங்கிலி, முருகன், பாவாடை, காா் ஓட்டுநா் ராஜேஷ், சக்திவேல், சீதாராமன், சுப்பிரமணி ஆகிய 8 போ் உயிரிழந்தனா்.
ராமலிங்கம், ராமா் ஆகிய இருவரும் பலத்த காயங்களுடன் திருச்சி அரசு மருத்துவமனையில் தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டிருந்தனா்.
இந்நிலையில், சிகிச்சை பலனின்றி ராமலிங்கம் திங்கள்கிழமை இரவு உயிரிழந்தாா். இதையடுத்து, விபத்தில் உயிரிழந்தோரின் எண்ணிக்கை 9-ஆக உயா்ந்துள்ளது. ராமருக்கு தொடா்ந்து தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

